பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற காலணிகள் எது?

Published On:

| By christopher

what are the best summer footwear

வெப்பம் அதிகமாக இருக்கும் கோடைக்காலத்தில் பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த நேரத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கோடையில் காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இறுக்கமான காலணிகள் அணியும்போது கால்களில் வீக்கம் ஏற்படலாம். காலின் பெருவிரலுக்கு இடையில் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். கோடையில், அணியும் காலணிகள் வழக்கமாக அணிவதைவிட, அளவில் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.

அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி, புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தட்டையான காலணிகளைத் தவிர்த்து, மெத்தென்று இருக்கும் வகையிலான மென்மையான காலணியையே தேர்வு செய்ய வேண்டும்.

சருமம் சுவாசிக்க அனுமதிக்கும் வகையிலும், இயற்கை வெப்பப் பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையிலும், காற்றோட்டமான காலணிகளைத் தேர்வு செய்வதும் கட்டாயம்.

நாம் எந்த வகையான காலணிகளை அணிந்தாலும், அன்றைய நாள் முடிவில், கால்களுக்குச் சிறிது நேரம் மசாஜ் தேவை. பருவ நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ கால்களை சிறிது நேரம் வைத்திருந்த பின், லேசாக மசாஜ் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்

வெயில் நிவாரணம் வருமா? அப்டேட் குமாரு

“மத உணர்வை தூண்டும் பேச்சு”: மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share