ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்ட் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சென்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து வெளிநாட்டில் கப்பலில் மீண்டும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடந்தது. முதல் கொண்டாட்டத்தை போன்றே இதிலும் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்ட்டுக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஜூலை 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தற்போது, ஆனந்த் – ராதிகாவின் திருமண அழைப்பிதழ் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழ் சிறு கோவில் போன்ற வடிவமைப்பில் உள்ளது. அதன் கதவை திறந்தால் மந்திரம் ஒலிக்கிறது. உள்ளே வெள்ளி பிளேட்டட் தேரில் கடவுளின் சிலைகள் உள்ளது.
மேலும், உள்ளே இருந்த பெட்டி போன்ற அமைப்பை வெளியில் எடுத்தால், அதில் திருமணம் குறித்த விபரங்கள் அடங்கிய பல பக்கங்கள் இருக்கிறது. மேலும் இரண்டு கடவுள் சிலைகள் உள்ளது. ஒரு ஷால் இருக்கிறது.
அந்த திருமண அழைப்பிதழை பார்த்தால் பக்திமயமாகவும், தங்கம்,வெள்ளியாகவும் நிரம்பி உள்ளது. ஆனந்த்-ராதிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டங்கள்: உதயநிதி அறிவிப்பு!
INDvsENG : மழை பெய்து போட்டி ரத்தானால் இந்தியா வெளியேறிவிடுமா?