முதுமை பருவத்தில் முடங்கிப் போகிறவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால், அது முடங்கிப் போகிற பருவம் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், அந்தப் பருவத்தில் வேறு சில பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதே உண்மை.
இந்த நிலையில், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு நம்முடைய உடல் எப்படி இருக்கப் போகிறது என்பது எல்லாருக்குமே ஓரளவு தெரியும். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஓய்வுக்காலத்துப் பிறகு நேரம் இருக்கிறது என்பதற்காக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம். அவை, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை ஓரளவுக்குத்தான் தரும்.
வயது குறைந்தவர்களுக்கும் சரி… வயதானவர்களுக்கும் சரி வரும் இடுப்புவலியும், மூட்டுவலியும் ஒரே மாதிரி இருக்காது. நிறைய மாறுபடும். பொதுவாக குனிந்து எழுந்து கொள்வது கடினமாகும்போது நம் உடலில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது என்று தெரிந்துகொள்ளலாம். அதற்காக பயப்பட வேண்டாம். வயதான காலத்தில் எலும்பு அடர்த்தி குறைந்திருக்கும். தசைகள் தளர்ந்து போயிருக்கும். இந்த நிலையில் குனியப் போகிறோம்… எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதாகத்தான் பார்த்துச் செயல்பட வேண்டும்.
முதியோர் பலர், ‘நான் இந்த வேலையை அப்போது செய்தேனே… இப்போது ஏன் செய்யக் கூடாது’ என்று நினைக்கிறார்கள். அது தவறு. முதுமையில் எலும்புகள், தசைகளில் தளர்ச்சி ஏற்படும். நீரிழிவால் பாதிக்கப்பட்ட முதியோர் சிலருக்கு உள்ளங்கால்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. பேலன்ஸ் தவறும். இந்த நிலையில் நினைத்த செயல் முடியாதபட்சத்தில் படபடப்பும், பயமும் ஏற்படும். மன அழுத்தம் ஏற்பட்டு நோய்வாய்ப்படுவார்கள். அதனால், நோய் வந்த பிறகு அதற்கு மருத்துவச் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதைவிட, நோய் வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
“முதியோர்களைப் பொறுத்தவரை ஏதாவது ஓர் உடற்பயிற்சியைத் தினமும் செய்யப் பழகிக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி, யோகா, சைக்கிளிங் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் தினமும் நடக்க வேண்டும். இதனால் எடை குறையும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் எல்லாம் கட்டுப்படும். எலும்புகள் வலுவாகும். இது வயதானவர்களுக்குச் சொல்லப்படும் சாதாரணமான விஷயமாக இருந்தாலும் இள வயதிலேயே உடம்பைச் சரியாகப் பராமரித்து இருந்தால் இந்தப் பிரச்னைகள் சீக்கிரத்தில் தாக்காது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என்கிற நிலைகளில் அவசரமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள், 40 வயதைக் கடந்த பிறகாவது முதுமைப் பருவத்துக்கான ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் முதுமையையும் மற்ற பருவங்களைப் போல இனிமையானதாக மாற்றும் வித்தை நம்மிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்’’ என்கிறார்கள் முதியோர்நல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கரை கடந்த டானா புயல் முதல் மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : காஜு பிஸ்தா ரோல்ஸ்
வக்ஃப் மசோதா.. ஜேபிசி கூட்டமா? பிஜேபி கூட்டமா? ஆ.ராசாவைப் பார்த்து பயப்படும் டெல்லி
விளையாட வந்தது ஒரு குத்தமா? காம்பியாவை துவைத்து ஜிம்பாப்வே நிகழ்த்திய சாதனைகள்!
அலர்ட் ஆகிக்கோங்க மக்களே… 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!