குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.
அதிகபட்சமாக ஈரோட்டில் 37.0 டிகிரி செல்சியஸ் (98.6 F) வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்த நிலையில் நேற்று குறைந்துள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 15.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வறண்ட வானிலையே நிலவும்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வரும் 13ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த
படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புது கொடியுடன் ரசிகர் படை : அரசியலுக்கு வருகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ் செல்லும் : நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு!