Want to look fresh faced all day

பியூட்டி டிப்ஸ்: அலுவலகத்தில் எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் வலம் வர வேண்டுமா?  

அலுவலகம் செல்வோர்  எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் அசத்த… ஹேண்ட் பேக்கில் அவசியம் வைத்திருக்க வேண்டிய மேக்கப் பொருட்களும் அவற்றைத் தேர்வு செய்யும் வழிமுறைகளும் இதோ…

ஃபேஸ் வாஷ்
உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப அதிக கெமிக்கல் இல்லாத ஃபேஸ் வாஷை தேர்வு செய்யுங்கள். சென்சிட்டிவ் சருமம் மற்றும் பரு, தேமல் போன்ற சரும பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஃபேஸ் வாஷ் வாங்குவது நல்லது.

சீப்பு
பெரிய பற்கள் கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். மரச்சீப்பு மண்டைப்பகுதியில் லேசான அழுத்தம் கொடுக்கும். அதனால் வறட்சி நீங்கி முடி உதிர்வு கட்டுப்படும்.

சன்ஸ்கிரீன்
சன்ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்.பி.எஃப் (Sun Protection Factor) அளவை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 30 எஸ்.பி.எஃப் இருப்பது போன்ற சன்ஸ்கிரீன் தேர்வு செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் ஜெல் டைப் சன்ஸ்கிரீனையும்,. வறண்ட சருமம் கொண்டவர்கள் க்ரீம் டைப் சன்ஸ்கிரீனையும், சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் லோஷன் டைப் சன்ஸ்கிரீனையும் தேர்வு செய்யலாம். சன்ஸ்கிரீன் பயன்படுத்திய 20 நிமிடங்களுக்குப் பிறகுதான் வெளியே செல்ல வேண்டும். சன்ஸ்கிரீன் பயன்படுத்திய 10 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கமான மேக்கப் அப்ளை செய்யவும்.

மஸ்காரா
மஸ்காராவில்  பிரவுன், கறுப்பு, ஊதா என பல நிறங்கள் கிடைக்கின்றன. அலுவலகப் பயன்பாட்டுக்கு கறுப்பு நிறம் பெஸ்ட். மஸ்காரா பயன்படுத்தும்போது கீழிருந்து மேலாக இமைகளின் மீது அப்ளை செய்யுங்கள்.

ஃபவுண்டேஷன்
வறண்ட சருமம் கொண்டவர்கள் க்ரீம் வடிவ ஃபவுண்டேஷனையும், எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் லிக்விட் ஃபவுண்டேஷனையும், நார்மல் சருமம் கொண்டவர்கள் பவுடர் ஃபவுண்டேஷனையும் தேர்வு செய்யலாம். ஃபவுண்டேஷன் வாங்கும்போது கைகளில் அப்ளை செய்து பார்க்காமல், தாடைப் பகுதியில் அப்ளை செய்து பார்த்து வாங்குவது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபவுண்டேஷன், உங்கள் ஸ்கின் டோனுக்கு பொருந்தும்படி இருக்க வேண்டும். ஃபவுண்டேஷனில் மேட் ஃபினிஷ், செமி மேட் ஃபினிஷ், பளபளப்பு தன்மை கொண்டது, ஸ்மோக்கி ஃபினிஷ் என நிறைய வகைகள் இருக்கின்றன. அலுவலகத்துக்குச் செல்பவர்களுக்கு மேட் ஃபினிஷ் ஃபவுண்டேஷன் பொருத்தமாக இருக்கும். ஃபவுண்டேஷன் பயன்படுத்திய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மேக்கப்பை தொடர்ந்தால் நீட் லுக் கிடைக்கும்.

காம்பேக்ட்
முகத்துக்கு சாதாரண பவுடர் உபயோகிப்பதைவிட காம்பேக்ட் பவுடர் பயன்படுத்தும்போது பளிச்சென இருக்கும். சருமத்தின் நிறத்தைவிட, ஒரு ஷேடு அதிகமாக இருப்பதுபோல் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும். அதே நேரம் முகத்தில் சுண்ணாம்பு அடித்ததுபோல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஃபவுண்டேஷன் அல்லது காம்பேக்ட் வாங்கும்போது ட்ரையல் பார்க்க, மஞ்சள் நிற லைட்டில் இல்லாமல் வெள்ளை நிற லைட்டில் நின்று அப்ளை செய்து பாருங்கள். காம்பேக்ட் அப்ளை செய்யும்போது புருவத்தில் படாமல் அப்ளை செய்யுங்கள். ஸ்பான்ஜ் மூலம் அப்ளை செய்யவும்.

காஜல்
கண்களுக்கான மை, கறுப்பு நிறத்தில் இருந்த காலம் மாறி, இன்று அதில் வெள்ளை, கறுப்பு, ஊதா, பிரவுன், நீலம், பச்சை என பல நிறங்கள் இருக்கின்றன. அலுவலக பயன்பாட்டுக்கு கறுப்பு அல்லது பிரவுன் நிறம் நீட் லுக் கொடுக்கும். கண்கள் அழகாகத் தெரிய வேண்டும்… ஆனால், கண்ணில் மை போட்டதுபோல் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் பிரவுன் நிற காஜலை தேர்வு செய்யுங்கள். கண்கள் பெரிதாக, ஈர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கறுப்பு நிற காஜலை தேர்வு செய்யுங்கள். கண்கள் பெரிதாகத் தெரிய வாட்டர் லைன் எனப்படும் கண்களின் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளை செய்யவும்.

லிப்ஸ்டிக்
அலுவலக பயன்பாட்டுக்கு பிங்க், பீச் போன்ற ஷேடுகள் பொருத்தமாக இருக்கும். லிப்ஸ்டிக்கில் க்ரேயான், லிக்விட் என நிறைய வகைகள் வந்துவிட்டன. பயன்படுத்த எது எளிதோ அதை வாங்கிக்கொள்ளலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் லிப் பாம் பயன்படுத்துவது அவசியம்.

செட்டிங் ஸ்பிரே
நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டும் என்பவர்கள் செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தலாம். செட்டிங் ஸ்பிரே பாட்டிலை நன்றாகக் குலுக்கிப் பயன்படுத்த வேண்டும். மேக்கப் அப்ளை செய்த பின் உங்கள் முகத்திலிருந்து எட்டு இன்ச் தள்ளி வைத்துக்கொண்டு ஸ்பிரே செய்ய வேண்டும். செட்டிங் ஸ்பிரே அப்ளை செய்த பின் முகத்தைத் தேய்க்கக் கூடாது. ஸ்பிரே தானாக காயும் வரை காத்திருக்கவும். உங்களுடையது வறண்ட சருமம் எனில் ஆசிட் அதிகம் கலந்த செட்டிங் ஸ்பிரே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னைக்கு வந்தது சென்னையோடு போகட்டும்: அப்டேட் குமாரு

தூதா – விமர்சனம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts