விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் விஜே மணிமேகலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்கு இரண்டாவது முறையாக நடந்த அவமானம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடனே, யாரும் அதிகாரிகள் யாரும் அவமானப்படுத்தி விட்டார்களா? என்று அவரின் வீடியோவுக்கு சென்று ரசிகர்கள் எட்டி பார்த்துள்ளனர். ஆனால், அங்கு நடந்ததே வேறு.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இப்போது மணிமேகலைதான் தொகுப்பாளராக உள்ளார். மணிமேகலை அவருடைய கணவர் உசேனை காதலித்து திருமணம் செய்த போது சில பிரச்னைகள் எழுந்தன.
மணிமேகலையின் குடும்பத்தினர் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஆறுதல் கூறியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவர் தனக்கென்று யூடியூப் சேனலும் நடத்தி வகிறார்.
இந்த நிலையில், மணிமேகலை தன்னுடைய கணவரோடு சென்னையில் உள்ள பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவசர அவசரமாக கிளம்பி போனதால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளை போட்டு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் இதை பார்த்துள்ளார்.
பிறகு அதை வீடியோவாக எடுத்த மணிமேகலை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். நான் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவமானப்பட்டேன். ரொம்ப கேவலமாக இருந்தது. யாரும் இதுபோல செஞ்சுடாதீங்க என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதே வேளையில், மணிமேகலை மேடம் கவலைப்படாதீங்க … இது தான் இப்போது ட்ரெண்டிங் என்று சொல்லுங்க என்று ரசிகர்கள் அவரை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
என்.சந்திரசேகரன் போட்ட பிளான்… டாடா செய்த மாயம்… வாயடைத்த ரிசர்வ் வங்கி!
ஸ்டாலின் அமெரிக்கா பயணம்… குவியும் வாழ்த்து!