விவோ நிறுவனம் தனது புதிய விவோ X100, விவோ X100 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 SoC ப்ராசஸர், 3 பின்புற கேமராக்கள், 5,000mAh வரையிலான பேட்டரி, 120W வரையிலான சூப்பர் சார்ஜிங் வசதி என பல அட்டகாசமான வசதிகளை கொண்டு அறிமுகமாகியுள்ளது. Vivo x100 and x100 pro price features
விவோ X100 சிறப்பம்சங்கள் என்ன?
ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS 4 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 2 நானோ சிம் வசதியை கொண்டுள்ளது. 6.78-இன்ச் AMOLED திரை, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம் மற்றும் 3000 நிட்ஸ் ஒளிரும் திறன் ஆகியவற்றை இந்த விவோ X100 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 SoC ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 பின்புற கேமராக்களை விவோ X100 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது: 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கில் கேமரா மற்றும் 100x கிளியர் ஜூம் திறன் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா. மேலும், செல்ஃபிகளுக்காக 32 மெகாபிக்சல் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh அளவிலான பேட்டரியை இந்த விவோ X100 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதன்மூலம், வெறும் 11 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை 50% சார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விவோ X100 Pro சிறப்பம்சங்கள் என்ன?
விவோ X100 போலவே, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS 4, மீடியாடெக் டைமென்சிட்டி 9300 SoC ப்ராசஸர், 2 நானோ சிம், 6.78-இன்ச் AMOLED திரை, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம் மற்றும் 3000 நிட்ஸ் ஒளிரும் திறன் ஆகிய வசதிகளை கொண்டே, இந்த விவோ X100 Pro ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது.
இந்த விவோ X100 Pro, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சூப்பர்-டெலிபோட்டோ கேமரா என 3 பின்புற கேமராக்களை கொண்டு அறிமுகமாகியுள்ளது. குறிப்பாக, இந்த சூப்பர்-டெலிபோட்டோ கேமரா மூலம், 4.3x ஆப்டிகல் ஜூம், 100x டிஜிட்டல் ஜூம் செய்து புகைப்படம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
5,400mAh என்ற அளவிலான பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விவோ X100 Pro 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
விவோ X100, விவோ X100 Pro விலை என்ன?
விவோ X100 ஸ்மார்ட்போன் 4 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.
12GB ரேம் + 256GB சேமிப்பு வகை – 3,999 சீன யுவான் (சுமார் ரூ.45,500)
16GB ரேம் + 256GB சேமிப்பு வகை – 4,299 சீன யுவான் (சுமார் ரூ.49,000)
16GB ரேம் + 512GB சேமிப்பு வகை – 4,599 சீன யுவான் (சுமார் ரூ.52,500)
16GB ரேம் + 1TB சேமிப்பு வகை – 4,999 சீன யுவான் (சுமார் ரூ.57,000)
விவோ X100 போலவே விவோ X100 ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
12GB ரேம் + 256GB சேமிப்பு வகை – 4,999 சீன யுவான் (சுமார் ரூ.57,000)
16GB ரேம் + 512GB சேமிப்பு வகை – 5,499 சீன யுவான் (சுமார் ரூ.62,500)
16GB ரேம் + 1TB சேமிப்பு வகை – 5,999 சீன யுவான் (சுமார் ரூ.68,500)
தற்போது, கருப்பு, நீலம், ஆரஞ்சு மற்றும் வெள்ளை என 4 வண்ணங்களில், நவம்பர் 21 அன்று சீனாவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo x100 and x100 pro price features
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு!
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?