Vivo v25 launch: நிறம் மாறும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள விவோ நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய தொழில் நுட்பங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் Vivo V25 ப்ரோ (vivo v25 pro specifications) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

vivo v25 pro

விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

ஆரம்ப மாடலான  8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளடக்கத்தை கொண்ட போனின் விலை ரூ.35,999  ஆகவும்  12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

vivo v25 pro

ஆகஸ்ட் 25 முதல் ப்ளிப்கார்ட்,  விவோ ஆன்லைன் ஸ்டோரிலும் மொபைல் கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இதை முன்பதிவு திட்டத்தில்  எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி, ரூ.3500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.. இது EMI க்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vivo v25 pro

மேலும் எஸ்.பி.ஐ, கோடக், ஐசிஐசிஐ வங்கி அட்டைகளுக்கு 10% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது விவோ நிறுவனம்.

விவோ V25 ப்ரோ  சிறப்பு அம்சங்கள்

  • வளைந்த ( 3D Curved) வடிவிலான டிஸ்பிளே
  • 6.56 இன்ச். ஃபுள் ஹெச்.டி+ (2,376×1,080 பிக்சல்ஸ்) ரெஸலுஷனில் இந்த போன் வெளிவந்துள்ளது.
  • மீடியாடெக் டைமன்சிட்டி 1300 Soc சிப்செட்.
  • 4,830 mAh திறன் கொண்ட பேட்டரி.
vivo v25 pro
  • 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்.
  • 190 கிராம் எடை
  • டூயல்-பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz),
  • ப்ளூடூத் v5.2
  • GPS மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை இந்த போன் கொண்டுள்ளது.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் பிரதான கேமரா 64 மெகாபிக்சலையும், 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவையும்,  2-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது.
  • ஐ ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.

இந்த போனின் சிறப்பம்சமாக பின்புறத்தில் உள்ள பேனல் நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளது.

இதற்காக colour changing Fluorite AG Glass இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

vivo v25 pro

Uv லைட் அல்லது நேரடியாக சூரிய வெளிச்சத்தில் போனின் மீது பொருளை வைத்தால் அந்த பொருளின் வடிவில் நிறம் மாறும்..

சில நிமிடங்கள் கழித்து இது தானாக இயல்பு நிலைக்கு மாறிவிடும்.

vivo v25 pro

Pure Black and Sailing Blue ஆகிய இரு வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளது.

க.சீனிவாசன்

Galaxy Z Fold 4 and Flip 4: அறிமுகமாகும் சாம்சங் புதிய தயாரிப்புகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts