விவோ நிறுவனம் தனது புதிய ‘விவோ டி3x 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
50 மெகாபிக்சல் கேமரா, 6,000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என பல அட்டகாசமான அம்சங்களுடன், ரூ.13,499 என்ற துவக்க விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளதால், ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே இந்த ஃபோன் கவனம் பெற்றுள்ளது.
விவோ டி3x 5ஜி விலை என்ன?
விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 4GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.13,499 என்ற விலையிலும்,
6GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.14,999 என்ற விலையிலும், 8GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.16,499 என்ற விலையிலும் விற்பனையாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் செலஸ்ட்டியல் க்ரீன் மற்றும் கிரிம்சன் ப்ளிஸ் என 2 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பிலிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா தளங்களில், இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், இந்த விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போனை எஸ்.பி.ஐ அல்லது எச்.டி.எஃப்.சி கார்டுகளை கொண்டு பெறுவோருக்கு ரூ.1,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன.
விவோ டி3x 5ஜி சிறப்பம்சங்கள் என்ன?
2 நானோ-சிம் பொருத்திக்கொள்ளும் வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓ.எஸ் 14 அமைப்பு கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
6.72 இன்ச் Full HD+ திரையை கொண்டுள்ள இந்த விவோ டி3x ஸ்மார்ட்போனில் 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 1000 நிட்ஸ் ஒளிரும் திறன் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
விவோ டி3x ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா. இந்த கேமரா 4K தரத்தில் வீடியோ எடுக்கும் திறனையும் கொண்டுள்ளது. முன்புறத்தில், செல்ஃபிகளுக்காக 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
முன்பு குறிப்பிட்டது போல, 6,000mAh என மிகப்பெரிய அளவிலான பேட்டரியை கொண்டுள்ள விவோ டி3x ஸ்மார்ட்போன், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே வைத்தியம்!
96 படத்தில் வந்த மாணவியா இது?.. ஹீரோயின் மாறி ஆகிட்டாங்களே… லேட்டஸ்ட் Photo வைரல்..!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மாதுளை ராய்த்தா