ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விருமன் பட பாணியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காதல் ஜோடி வீடியோவை பார்த்த போலீஸ் எச்சரித்து அனுப்பியிருக்கிறது.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நடித்து வெளியான படம் விருமன். இதில் பாடல் காட்சி ஒன்றில் கார்த்தி, அதிதியை பைக்கில் முன்னால் உட்கார வைத்து ஓட்டிச் செல்வார்.
இதேபோன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில் இன்று(டிசம்பர் 30) காதல் ஜோடி ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்தது. மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து காதலனை இறுக கட்டிப்பிடித்தவாறு அந்தப் பெண் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் அந்த காதல் ஜோடியை அழைத்து ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சை கண்டுகொள்ளாத காதல் ஜோடி தங்களுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தது.
காதல் ஜோடியின் அந்த மோட்டார் சைக்கிள் பயண காட்சியை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த காரில் பயணித்த அந்த நபர், அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.
அந்த காட்சி வைரலாகி விசாகப்பட்டினம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காதல் ஜோடியை தேடி கண்டுபிடித்து, இரண்டு பேரின் பெற்றோரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
உயிரை பணயம் வைக்கும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது என்று இளம் தலைமுறையினருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கலை.ரா
பாமக பற்றி பிரசாந்த் கிஷோர்: பொதுக்குழுவில் அன்புமணி தகவல்!
நீங்க எந்த சேனல்? – சிரித்துக்கொண்டே கோபப்பட்ட ஓபிஎஸ்