நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும், ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை அடித்து நொறுக்கும் வீடியோவை வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது ஒரு விளையாட்டு மட்டுமே என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி ஜோடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதனால் கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றதும் ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை உடைத்து நொறுக்குகிறார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இது ஒரு விளையாட்டு மட்டுமே, பாகிஸ்தான் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.” என்று தெரிவித்துள்ளார். வீரேந்தர் சேவாக் பகிர்ந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செல்வம்
தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!
தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!