ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது விராட் கோலியின் நாட்டு நாட்டு பாடல் நடன அசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (மார்ச் 17) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல்-ஜடேஜா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் போட்டியின் இடையே, விராட் கோலி ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடலில் வரும் நடன அசைவை ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி பேட்டிங்க் செய்து கொண்டிருக்கும் போது ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த விராட் கோலி நடனமாடியதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பலரது வரவேற்புகளையும் கோல்டன் குளோப், ஆஸ்கர் என விருதுகளையும் குவித்து வைரலான நிலையில் விராட் கோலியின் நாட்டு நாட்டு நடனமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
44 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
கன்னியாகுமரி வந்தடைந்தார் திரவுபதி முர்மு