உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஒருவர் சேலை அணிந்து பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ரீனா சிங் என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்த வீடியோ 9,35,000 க்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் 33 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

https://www.instagram.com/reel/Cm1nOhXPyQ8/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை பகிர்ந்து, ரீனா சிங்க் தனது இஸ்டாகிராம் பதிவில் “இது ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரீனா சிங் சேலை அணிந்து உடற்பயிற்சி செய்ததை சிலர் பாராட்டினாலும், மற்றவர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதற்காக விளையாட்டு ஆடைகளுக்குப் பதிலாக சேலை அணிவது சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“சேலை அணிவது பரவாயில்லை ஆனால் காயத்தைத் தவிர்க்க ஜிம் உடைகளை அணிய வேண்டும். சேலை அணிந்து நீங்கள் சில பயிற்சிகள் செய்யலாம். ஆனால் முதல் பயிற்சியைப் போல அனைத்து பயிற்சிகளையும் செய்ய முடியாது. எனவே, காயத்தைத் தவிர்க்க சரியான ஆடைகளை நீங்கள் அணிய வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், “தயவு செய்து இது போன்ற வீடியோக்களை விளம்பரப்படுத்தாதீர்கள். மக்கள் இதனால் ஈர்க்கப்பட்டு இதுபோன்ற ஆடைகளை அணிந்தால் அது மிகவும் ஆபத்தானது.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை: முதல்வர்
ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்; இல்லையேல் மாற்ற வேண்டும்- கமல்ஹாசன்