சமூக வலைதளங்களில் பல நேரங்களில் வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான வீடியோக்களை நாம் பார்க்கிறோம். இது போன்ற வீடியோக்கள் மக்களிடம் நாளுக்கு நாள் அதிக அளவில் கவனங்களை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவும்.
இந்த வீடியோக்களில் சிலவற்றை பார்த்தால் இப்படியும் கூட நடக்குமா என்று நமக்கு தோன்றும்.
குறிப்பாக குரங்குகள் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்கென்றே ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் மான் மற்றும் குரங்கு இடம்பெற்றுள்ளது. மான்கள் தங்கள் உணவைத் தேடி நடக்கின்றன. இதற்கிடையில், குரங்கு, மானுக்காக மரக்கிளையை கீழே இறக்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
மரத்தில் உள்ள இலைகளை மான்கள் உண்ண முற்படுகையில், குரங்கு மான்களுக்கு உயரமான கிளையை கீழே இறக்குகிறது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “காட்டில் குரங்கு மற்றும் மான்களின் நட்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.அன்பான மான்களுக்கு உணவளிக்க உதவுதல்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உதயநிதியை அமைச்சராக்குவதில் அவசரம் ஏன்: தினகரன் கேள்வி!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வெளுக்கப்போகும் மழை!