விக்ரம் லேண்டர்: நேரலையில் பார்த்த தோனி… வைரல் வீடியோ!

Published On:

| By Jegadeesh

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை ஜூன் 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. இதனை தொடர்ந்து உலக நாடுகளால் உற்றுநோக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நேற்று மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறங்கிறது.

இதன் மூலம் நிலவின் தென்துருவ பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தடம் பதித்த நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்தது. இந்த சாதனையை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இஸ்ரோவுக்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் ஜிம்மில் இருந்த டிவியில் இந்த வீடியோ காட்சியை பார்த்து கைகளை தட்டி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மகள் ஷிவாவும் இந்த காட்சியை பார்த்து துல்லி குதித்து தன்னுடைய  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நெல்லையில் சோகம்: புதிய தலைமுறை கேமராமேன் விபத்தில் பலி!

நெல்லையில் சோகம்: புதிய தலைமுறை கேமராமேன் விபத்தில் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel