vikram soft landed on again

2 வது முறையாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்!

டிரெண்டிங்

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் 2-வது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ இன்று (செப்டம்பர் 4) தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.

இந்நிலையில், தனது ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு முறை தரையிறக்கியுள்ளனர்.

அதாவது கட்டுப்பாடு அறையில் இருந்து அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் லேண்டர் சாதனம் 40 சென்டிமீட்டர் மேலெழும்பி மீண்டும் கிட்டத்தட்ட 30, 40 சென்டிமீட்டர் தள்ளி நிலவின் தென் துருவத்தில் மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட எக்ஸ் பதிவில், லேண்டரின் அனைத்து கருவிகளும் சரியாக  உள்ளன என குறிப்பிட்டு, இவ்வாறு மீண்டும் ஒரு முறை லேண்டரை மேலெழுப்புவது வருங்காலங்களில் மனிதர்கள் வெற்றிகரமாக நிலவிற்கு சென்று வருவதற்கான ஒரு முன்னெடுப்பு என பதிவிட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்!

மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *