விஜய்க்கு அபராதம் விதித்த காவல்துறை!

Published On:

| By Kavi

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடிகர் விஜய் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் வந்த காரை மறித்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டுச் சென்றபோதும், அவரது காரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாகப் பலரும் சமூக வலைதளங்களில் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து புகார் தெரிவித்தனர்.

இந்த சூழலில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீசார் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சலான் அனுப்பியுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்திருப்பது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா

தேர்தல் ஆணையர் நியமனம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்!

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- காயத்ரி…  ஆடியோ சர்ச்சை பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share