“பிக்பாஸ் ரிவ்யூல நல்ல வருமானமாமே?” – ரவீந்தரை திணறடித்த விஜய் சேதுபதி

Published On:

| By Selvam

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியின் முதல் கன்டஸ்டன்ட்டாக தயாரிப்பாளர் ரவீந்தர் என்ட்ரி கொடுத்தார். இதற்கு முன்பு நடைபெற்ற பிக் பாஸ் போட்டி குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கன்டெஸ்டன்ட்கள் குறித்தும் காரசாரமாக விமர்சனம் செய்து யூடியூப் சேனல்களுக்கு ரவீந்தர் பேட்டி கொடுத்து வந்தார்.

இந்தநிலையில், அவரே இந்த நிகழ்ச்சியின் கன்டஸ்டன்டாக பங்கேற்றிருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. முதல் ஆளாக அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் ரவீந்தரிடம் கேள்வி கேட்டு, முதல் பாலிலேயே விஜய் சேதுபதி சிக்ஸர் அடித்துள்ளார்.

“நீங்க பிக்பாஸ் நல்லா ரிவ்யூ பண்ணுவீங்கன்னு கேள்விப் பட்டேன், எத்தனை வருஷமா ரிவ்யூ பண்றீங்க… நல்ல வருமானமாமே?” என்று ரவீந்திரடம் கேள்வி கேட்டார்.

இதற்கு சிரித்தபடி பதிலளித்த ரவீந்தர், “ஏழு வருஷமாக பிக் பாஸ் ரிவ்யூ பண்ணிக்கிட்டு வரேன். நல்ல வருமானம் தான் சார். நான் ரிவ்யூ பண்ண கன்டஸ்டென்ட் எல்லோரும் எப்போது நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போவேன் என்று காத்திருந்தார்கள். அது இப்போது நடந்திருக்கிறது” என்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எல்லோரும் ஏர்ஷோவுக்கு போய்ட்டாங்க”: அதிமுக கூட்டத்தில் ஜெயக்குமார்

விண்ணில் விமானங்கள் சாதனை… மண்ணில் மக்கள் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share