ரசிகர்களைச் சந்தித்த விஜய்: வைரலாகும் வீடியோ!

டிரெண்டிங்

சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்ற வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது வாரிசு எனப் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாகத் திரைக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில், படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய்யை சந்திக்க முயன்றனர். ஆனால் நடிகர் விஜய் ரசிகர்களைச் சந்திக்கவில்லை.

மேலும், காலை முதல் இரவு வரை ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஜய்யை பார்க்கக் காத்திருந்த ரசிகர்களைத் தனது காரில் இருந்து இறங்கி விஜய் சந்தித்தார்.

ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுச் சென்றார். .

இதனை வீடியோவாக எடுத்த ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மோனிஷா

இந்தியா-தென்னாப்பிரிக்கா: டி20 தொடர் முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்தது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0