டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், மகேஷ்பாபு ரசிகர்கள்!

டிரெண்டிங்

தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளத்துடன் திகழ்பவர் விஜய். அண்மையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், மோசமான விமர்சனங்களையே பெற்றது.

விஜய் தற்போது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப் பட்ட சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் , தற்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் ”national troll material vijay’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபு ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Vijay Maheshbabu fans clash

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழகம் தாண்டி கேரளா மற்றும் ஆந்திராவில் அண்மைக்காலமாக நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில், அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள வாரிசு படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளதால், இது மகேஷ் பாபுவின் படங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதி இது போன்று ட்ரெண்டிங் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

Vijay Maheshbabu fans clash

மேலும் , விஜய் ரசிகர்கள் தற்போது ’my dear thalapathy’ என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு மகேஷ்பாபு கொடுத்த மரக்கன்று ஒன்றைத் தனது வீட்டில் நட்டு ”நன்றி மகேஷ்பாபு” என்று விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ அப்டேட்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *