நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள க்யூட் புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்துள்ளன.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ’நானும் ரெளடி தான்’ படத்தில் நடித்தார்.
அப்போது முதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் கடந்த ஆண்டு இதே தேதியில் (ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தனர்.
திருமணமான நான்கே மாதத்தில் குழந்தையா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற தகவலை அறிவித்தனர். அது சர்ச்சையாக வெடித்த நிலையில், தகுந்த ஆதாரங்களை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
முதல் திருமண நாள் கொண்டாட்டம்!
இந்நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதனை இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடிய நிலையில், குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு எமோசனல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே. ஏற்ற, இறக்கங்கள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் நிறைந்ததாக இந்த ஓராண்டு இருந்தது. எனினும், அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வரும்போது நான் அடைய விரும்பும் கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும், நம்பிக்கையையும் பெறுகிறேன்.
இந்த குடும்பம் கொடுக்கும் பலம் தான் எல்லாற்றையும் மாற்றுகிறது! சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதே வேளையில் 9 மாதத்திற்கு பிறகு தங்களது இரட்டை குழந்தைகளின் முகம் தெரியும்படி முதன்முறையாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சிறை உறுதி!
டெல்டாவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!