பிரகாஷ் ராஜின் லவ் வீடியோ: த்ரிஷாவின் க்யூட் ரியாக்‌ஷன்!

டிரெண்டிங்

நடிகர் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் ஜாலியான வில்லனாக நடிகர் பிரகாஷ் ராஜ் ‘முத்துபாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் விஜயை விட அதிகமாக பேசப்பட்டது பிரகாஷ் ராஜ் நடித்த முத்துப்பாண்டி கதாபாத்திரம். குறிப்பாக அந்த ‘செல்லம்’ டயலாக் தான் இன்றளவும் பேசப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களை ’செல்லம்ஸ்’ என கொண்டாட வைத்தார் பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக வலம் வரும் இந்த முத்துப்பாண்டி கதாபாத்திரத்தை வைத்து சமூக வலைதளங்களில் அடிக்கடி மீம்ஸ் உருவாக்கி ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர் மீம் க்ரியேட்டர்கள்.

இந்நிலையில் , அண்மையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்த பிரகாஷ் ராஜின் கதாபாத்திரத்தில், முத்துப் பாண்டியின் ப்ளாஷ்பேக்கை பொறுத்தி, அவர் விரட்டி விரட்டி காதலிக்கும் த்ரிஷாவின் தனலட்சுமி கதாபாத்திரங்களை சேர்த்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர் மீம் க்ரியேட்டர்கள்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் என் நாளை முழுமையாக்கி விட்டீர்கள்.. செல்லம்ஸ் ஐ லவ் யூ” என த்ரிஷாவை டேக் செய்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவுக்கு நடிகை த்ரிஷாவும் ரியாக்ட் செய்து, வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் சிரிப்பு எமோஜிக்களுடன் பகிர்ந்துள்ளார். த்ரிஷாவின் இந்த ரியாக்‌ஷன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தின் அப்பாவாக, அதாவது சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சினம் – சினிமா விமர்சனம்!

எடியூரப்பா ஊழல் வழக்கில் எடப்பாடியின் உறவினர்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.