டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவேற்றுவது அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விதவிதமாகவும் சாகச பாணியிலும் இளைஞர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லி மெட்ரோவில் பயணித்த பரி ஷர்மா பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலி அப்பாஸ் சபார் இயக்கிய குண்டேய் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற அஸ்லாம் இ இஷ்கும் பாடலுக்கு நடினமாடியுள்ளார்.
மெட்ரோ ரயிலில் இளம்பெண் திடீரென நடனமாடியதால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் அவரை பார்க்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் சிலர் இந்த வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு டேக் செய்து பயணிகளுக்கு இடையூறாக பொதுப்போக்குவரத்தில் நடனமாடும் இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக டெல்லி மெட்ரோவில் இதுபோன்று இளைஞர்கள் பலரும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் யாரும் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இந்தநிலையில் பாலிவுட் பாடலுக்கு இளம்பெண் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
“ஒன்றும் செய்யாததற்கு ஒப்புதல் வாக்குமூலம்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதில்!
25 சீட் சர்ச்சை : அமித்ஷா பேசியது என்ன?