“இப்படியொரு கூட்டுக்குள்ள வாழ தோணுதே”: வைரலாகும் யானை குடும்பம்!

டிரெண்டிங்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குடும்பாக யானைகள் உறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியதால் விலங்குகளும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாகக் காடுகள் வறண்டு போனதால் தண்ணீர், உணவு தேடி யானைகள் ஊருக்குள் வந்தன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

காடுகளில் மரங்கள் , புற்கள் துளிர்க்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த சூழலில் ஒரு பசுமையான இடத்தில் யானைக் கூட்டம் குடும்பமாக உறங்குபோது, ஒரு யானை காவலுக்கு நிற்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு முதலில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் எங்கோ இரு இடத்தில் அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் கிளாஸ் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஒரு இளம் யானை எப்படி கண்காணிக்கிறது. இது நமது சொந்த குடும்பங்களைப் போலவே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பவர்களின் மனதை மொத்தமாக கொள்ளை கொள்ளும் இந்த வீடியோவை பகிரும் இணையதளவாசிகள், “இப்படியிருப்பதே வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

share market: இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!

share market: இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *