பியூட்டி டிப்ஸ்: இயற்கை அழகு தரும் காய்கறி ஃபேஷியல்!

டிரெண்டிங்

“பியூட்டி பார்லர் போனால்தான் முகம் பளிச் என இருக்கும் என்பது இல்லை. வீட்டிலேயே செய்து கொள்ளும் காய்கறி ஃபேஷியல் மூலமாகவும் முகத்தைப் பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம்.

இதனால், சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சுருக்கங்கள் மறைந்து, என்றும் இளமை தோற்றத்தைத் தரும். முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மறையும். சருமத்தின் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும். முகம் நீண்ட நாட்கள் பளிங்குபோல் மின்னும்” என்கிறார்கள் இயற்கை அழகுக்கலை நிபுணர்கள்.

”முதலில் எந்த ஒரு ஃபேஷியல் செய்வதற்கு முன்பும் சருமத்தை நன்றாகச்  சுத்தப்படுத்த வேண்டும். அதற்காக காய்ச்சி ஆறவைத்த பாலை பஞ்சில் தொட்டு முகத்தை அழுத்தித் துடையுங்கள். இதனால், முகத்தில் இருக்கும் அழுக்கு அனைத்தும் வெளியேறிவிடும். முகத்தில் எங்கேனும் வறண்ட பகுதி இருந்தால் அங்கு அதிகமாக ஒத்தடம் கொடுக்கும்போது அடைப்பு நீங்கிவிடும்.

அடுத்து, கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.  இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரி செய்யும்.  தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிறத்தையும் கொடுக்கும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் துவையல்

மீண்டும் எஸ்.ஆர்… ஓரங்கட்டப்பட்ட ராஜப்பா… புதுமுகம் பொன்னர்-சங்கர்…  முடிவுக்கு வரும் மணல் பஞ்சாயத்து!

மாமல்லபுரத்தில் பயங்கரம்… கார் மோதி 5 பெண்கள் பலி!

“நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க கை தட்டல பாத்தியா” :சூரியை கிண்டல் செய்த இளையராஜா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *