கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!

Published On:

| By Kavi

Veg Chapati Roll Recipe

வெயில் காரணமாக கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சம்மர் ஹாலிடேஸும் முடிந்து விட்டது. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘லஞ்ச் பாக்ஸ்ல என்ன வைக்கிறது’ என்ற பரபரப்பு அம்மாக்களிடம் மீண்டும் தொற்றிக்கொண்டு விட்டது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வெஜ் ரோல் சப்பாத்தி ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

கோதுமை மாவு – 200 கிராம்

துருவிய கேரட், கோஸ், முள்ளங்கி – மூன்றும் சேர்த்து அரை கப்

இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா- 10 இலைகள்

உப்பு, எண்ணெய், மிதமான சூட்டில் வெந்நீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறித் துருவல், இஞ்சி விழுது, நறுக்கிய புதினா, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். மாவை மெல்லிய சப்பாத்தியாகத் தேய்த்து தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் பரப்பிவிட்டு ரோல் செய்யவும். இதை இரண்டாக கட் செய்து ‘டூத் பிக்’ குத்தி லஞ்ச் பாக்ஸில்வைக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – நான்ஸ்டிக் பாத்திரங்கள்… எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!

கிச்சன் கீர்த்தனா: மாங்காய்  மோர் பச்சடி

அக்கா ஒரு ஐடியாவோட வந்துருக்கு போல : அப்டேட் குமாரு

மோடி 3.0 : பதவியேற்ற அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel