bangalore air show

காதலர் தினம்: வானில் இதயத்தில் அம்பு விட்ட விமானிகள்!

டிரெண்டிங்

நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்வதேச விமான கண்காட்சியில் பிரதமர் மோடி முன்பு காதல் சின்னத்தை தத்ரூபமாக விமானிகள் காட்சிப்படுத்தி அசத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா விமான தளத்தில் நடைபெற்று வரும் ஆசிய விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற கண்காட்சியில் விமானிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர்.

https://twitter.com/minnambalamnews/status/1625101689224142850?s=20&t=v6EFslNh8mTyA4jglyTMWg

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக காதலர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் விமான கண்காட்சியிலும் காதலர் தினத்தை பிரதிபலிக்கும் வகையில் விமானிகள் சாகசம் நிகழ்த்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி முன்பு காதலர்கள் சின்னமான இதய வடிவில் வில் பாய்வது போல விமானிகள் வின்டேஜ் விமானம் மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்தினர்.

இதனை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

கலை.ரா

பிரபல பாடலாசிரியர் மீது காதலி பரபரப்பு புகார்!

‘perto’ வகை ஏடிஎம்களை குறி வைக்கும் கொள்ளை கும்பல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0