அஜித் குமார் நாயகனாக நடித்து வரும் படத்தை போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு என்னவாக இருக்கும் என ஊடகங்கள் ஒவ்வொருவிதமான தகவல்களை செய்திகளாக வெளியிட்டு வந்தன.
ஒரு வழியாக நேற்று மாலை படத்தின் பெயர் துணிவு என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பல மாதங்களாக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அஜித்குமார் ரசிகர்களுக்கு இது மாபெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இதே போல் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் முதல் பார்வையை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
இந்த முதல் பார்வை இதுவரை 23.5K மறுபதிவும் மற்றும் 72K விருப்பங்களையும் சமூக வலைதளத்தில் பெற்றிருந்தது.
நேற்று மாலை வெளிவந்த அஜித்குமார் நடித்துவரும் துணிவு படத்தின் முதல் பார்வை 27K மறுபதிவும்,
மற்றும் 79.4K விருப்பங்களையும் பெற்று வாரிசு படத்தின் முதல் பார்வை மூன்று மாதங்களாக பெற்றிருந்த மறுபதிவு விருப்பங்களை, 12 மணி நேரத்தில் முறியடித்துள்ளது துணிவு படத்தின் முதல் பார்வை
இது தயாரிப்பாளர்களின் சமூக வலைதளத்தின் பதிவுகளை அடிப்படையாக கொண்டது.
ஏனென்றால் நடிகர் விஜய் போன்று அஜித்குமார் சமூக வலைதளத்தில் இல்லை என்பதால் இரண்டு முன்னணி நடிகர்களின் சமூகவலைதளத்தில் அவர்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முடியாது.
வாத்தியை கண்டு கொள்ளாத தனுஷ் : ஏன்?
ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக முதல் சிறை நிரப்பும் போராட்டம்!