மன்சூரும் மணிப்பூரும்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

டீ குடிக்க போன இடத்துல மன்சூர் அலிகான் பிரஸ்மீட் வீடியோதான் செம ஹிட்டா ஓடிக்கிட்டிருந்துச்சு. நம்ம நண்பர் ஒருத்தரு, ‘ கேப்டன் பிரபாகரன் படத்துல வில்லனா நடிச்சதுலேர்ந்தே மன்சூர் அலிகான் ஒரு மார்க்கமானவர்தான்னு தெரியும்.

லியோ படத்துல த்ரிஷா பத்தி அவர் கொடுத்த பேட்டிய படிச்சுட்டு த்ரிஷாவுக்கு ஹர்ட் ஆனது நியாயம். அதுக்காக மன்சூரை இப்படி சுத்தி சுத்தி அடிச்சிக்கிட்டிருக்காங்களே?’னு கேட்டாப்ல,

’ஆமாய்யா மன்சூர் சினிமாலதான் வில்லன். ஆனா நெஜத்துல ஒரு பிளாக் காமெடியன். மன்சூரோட லூஸ் டாக்கையெல்லாம் இவ்வளவு பெரிசுபடுத்துறவங்க… மணிப்பூர் பத்தியெல்லாம் எவ்வளவு பேசினாங்கனு நமக்கு தெரியும். நீ பஜ்ஜிய எடு’னு சொன்னேன்.

நீங்க அப்டேட்ட பாருங்க…

Kirachand
my friend ~ இன்னைக்கு உலக ஹலோ தினமாம்.
me ~ அதுக்கு?
my friend ~ ஹலோ சொல்ல ஆளே இல்லை…
me ~ ஹலோ சொல்ல போனே இல்ல… போவியா…

பாக்டீரியா

~ ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிரட்டல்..!

: சீனாக்காரன் கிட்ட சண்டைக்கு போங்கடானு சொன்னா Cricket Player கிட்ட சண்டைக்கு போயிட்டு இருக்கானுங்க..!

MooknayakDr
கண் கலங்குவானுங்க…. ரெண்டு பேரையும் தோள்ல சாய்ச்சி ஆறுதல் சொல்ற மாதிரி ஒரு ஃபோட்டோ தேத்திடலாம் னு பெருசு ரொம்ப நேரம் ட்ரை பண்ணிருக்கு… நடக்கல…

Muthusamy Muthusamy
வெளிநாடுகளில் மனுஷனைத் தவிர வேறு எதுக்கும் அவர்கள் மதிப்பு கொடுப்பது இல்லை..
ஆனா இங்க, மனுஷனைத் தவிர மீதி எல்லாத்துக்குமே மதிப்பு கொடுக்குறாங்க.
அதனால் தான் இந்த முரண்… திருந்த வேண்டியது அவர்கள் அல்ல நாம்தான்…
Cheems..
டீம்ல இருக்குற மொத்த பேருக்கும் ஆளுக்கு ஒரு கருங்காலி மாலை

வாங்கி போட்டு இருந்தா, இந்த மேட்ச ஈசியா ஜெயிச்சு இருக்கலாம்..

ஐடியா இல்லாத பசங்க.

 

அஹோரி

சிங்கத்துக்கு தான் யானையோட பவர் என்னனு தெரியும்.. காட்ல சிங்கத்த பார்த்து மிரள்ற மிருகங்களுக்கு மத்தியில யானை எப்பவுமே ராஜா தான்.. தோனி யானை எவனுமே நெருங்க முடியாத யானை
SKP KARUNA
சென்னை 28 படத்திலே விஜய் வசந்த் பேட்டை வேணும்னே போட்டு தரையிலே தேய்ப்பானே? அதே சீன்.
நமக்கு அதே வலி..
 
 DESPOTER 
அடப்பாவி 20 கோடி வோட்டை இப்படி காலுக்கு கீழ வெச்சி இருக்கியேடா சண்டாலா – ஜீ கருவல்….
ராஸ்கல்
இந்த சோகத்த IPL வந்ததும் மத்தவனுகளாம் மறந்துருவானுக.. ஆனா RCB-க்கு IPL லே சோகமா தான் இருக்கு
+1
0
+1
16
+1
2
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *