தென்மாவட்டத்துல ரெட் அலர்ட் கொடுக்கவும் தென்கோடி குமரில இருக்குற எனக்கு பதட்டம் வந்துடுச்சி.. ஆனா எங்க அம்மாவும், வீட்டுகாரம்மாவும் ‘அப்போ நமக்கும் 6000 ரூபா கவர்மெண்ட் கொடுக்கும்ள’னு பேசிக்கிட்டு ஒரே குஷி…
ஆனா ரெண்டு நாளா நெல்லைல அதிரடி காட்டுன மழ, குமரில டக் அவுட் ஆன மாறி ஆஃப் ஆன பிறகு தான் மனசு லேசாச்சி…
ஆனா இன்னைக்கு நெல்லைக்கு 6000 ரூபாய் அறிவிச்ச அரசு’குமரிக்கு வெறும் 1000 ரூபாய் தான் கொடுப்போம்னு சொல்லிடுச்சி.
நேத்துவர சிரிச்சிக்கிட்டு இருந்த மாமியாரும், மருமகளும் இதான் சாக்குன்னு இப்போ வீட்டுல சண்டய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க… எங்க அம்மா, ’வந்தவளும் சரியில்ல… வந்தவனும்(மழ) சரியில்ல’னு சாட மாடையா பேச…
’நல்லா ஊரா இருந்தா மழ பெய்யும்’னு சட்டுன்னு வீட்டுக்காரமாவும் அத ஊர் சண்டயா மாத்த… இந்த பிரச்சனைக்கு இப்போ நான் தான் ஜட்ஜய்யா… என்னத்த சொல்ல….
நீங்க அப்டேட் பாருங்க!
Kirachand
142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்! – எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை டிஸ்மிஸ் பண்ணல… சஸ்பெண்ட் பண்ணித்தான் வச்சிருக்கீங்க போல!
Perfect match 😂 pic.twitter.com/zEKN0K2c10
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) December 20, 2023
black cat 2
தோழி.. உங்க போட்டோ 1 அனுப்புரிங்களா..?
எதுக்குங்க?
கிறிஸ்மஸ்க்கு என்ன வேணும்னு Santa கேட்டா காமிக்கறதுக்குதான் 🥺
balebalu
ஷேர் மார்க்கெட் டௌன் ஆனா கூட இவ்வளவு படபடப்பு வராது போலிருக்கு
ட்விட்டர் கொஞ்ச நேரத்துக்கு டௌன் ஆனா உலகமே பதட்டம் ஆகிடுது 😀 #TwitterDown
Kirachand
கன்னத்துல கைவைத்து உட்கார்ந்திருந்தால்…
கப்பல் கவிழ்ந்து இருக்கணும்னு அவசியம் இல்லை…
அம்மா வீட்டுக்குப் போன மனைவி திரும்பி வரப்போறாங்கன்னு கூட இருக்கலாம்…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
~ உச்சநீதிமன்றம் செல்கிறார் பொன்முடி தரப்பு
எஸ்சி நவ் எக்சாட்லி லைக் வடிவேலு ~
”என்னையும் மதிச்சு மேல் முறையீடு பண்ண போற உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. ஆனா உங்களுக்கு நியாயமான தீர்பபு சொல்ல எங்க கிட்ட நல்ல நீதிபதி யாருமே இல்லையேன்னு நினைக்கும் போது..”
balebalu
~ அதோ பாருடி புது வருஷம் வரப்போறதுனால ஜம்முனு டிரஸ் பண்ணிக்கிட்டு ஜிம் ல சேர போய்கிட்டு இருக்காரு
~ அட நானே காலண்டர் கடையில வாங்குறதா யாராவது ஓசில தரமாட்டாங்களா ன்னு போய்கிட்டு இருக்கேன்
இவளுக வேற
black cat 2
அவ பேசலயே ன்னு வருத்தப்படாத..
அவ பேசுனா அத விட அதிகமாக வருத்தப்படுவன்னு புரிஞ்சிக்க…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
“காளி கோயில்ல பூஜை செஞ்சியே என்னாச்சு பாத்தியா?”- தண்டனைக்கு பின் ஆதரவாளரிடம் சிரித்த பொன்முடி
சலார் செகண்ட் சிங்கிள் வெளியானது!