அம்பயர் ஆகிறார் ஆளுநர் ரவி… உலகக்கோப்பையில் திருப்பம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

மத்தியானம் பிரியாணி சாப்ட்டு வேர்ல்டு கப் ஃபைனல் பார்ப்போம்னு உக்காந்தா ரோஹித், கோலி, சுப்மன் கில்னு எல்லாருமே ஃபுல்லா பிரியாணி தான் சாப்பிட்டு வந்திருப்பாங்க போல. நாமளும் பதட்டப்படாம சுச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி வாழ பழகிப்போம்.

இப்போதைக்கி இந்தியாவோட தோல்வியை ஒத்திவைக்க ஒரே வழிதான் இருக்கு. அது என்னன்னா… டெல்லி போயிருக்குற ஆளுநர் ரவிய உடனே மோடி ஸ்டேடியத்துக்கு கூட்டியாந்து மேட்ச் அம்பயர் ஆக்கிடணும்.

அவர்தான்  பாக்கியிருக்குற இந்திய வீரர்கள் அவுட் ஆனா கூட, டெசிஷனை பெண்டிங்ல போட்டுருவாரு.  வருசக் கணக்கானாலும் அவர்கிட்டேர்ந்து முடிவு வராது. அதுக்கப்புறம் ஆஸ்திரேலியா டீம் சுப்ரீம் கோர்ட்டு போயி கேஸ் போட்டு அது முடியறதுக்குள்ள அடுத்த வேர்ல்டு கப்பே வந்துடும்…

நீங்க கிரிக்கெட் அப்டேட்ஸோட நம்ம மீம்ஸ் அப்டேட்ஸும் பாருங்க!

ச ப் பா ணி

டி.வி ஆஃப் பன்னிட்டு தூங்கி எழுந்து மேட்ச் பார்த்தா ஸ்கோர் ஏறியிருக்கும் என்பது 90 கிட்ஸ் நம்பிக்கை #INDvsAUS

கடைநிலை ஊழியன்

cricket பாக்காத குரூப்

finals சா இன்னைக்கு..

ஜோ…

என்னடா இந்த மன்சூர், பொண்ணு கழுத்துல மாலை போட்ட கூல் சுரேஷ்க்கு அது தப்புன்னு அட்வைஸ் பண்ணிட்டு,

கூட நடிக்கிற நடிகைகள தொட முடியல, ரேப் ஸீன் இல்லன்னு பீல் பண்ணிட்டு இருக்கான்..

ச ப் பா ணி

பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் விஜயசாந்தி

#கட்சி மாறுவதில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுப்பார் போலயே

கோழியின் கிறுக்கல்!!

மாதத்தின் நாட்கள் நகர நகர, மட்டனிலிருந்து சிக்கனுக்கு மாறி விடுகிறது ஞாயிறு உணவு!!

கடைநிலை ஊழியன்

எல்லா மேட்ச் ‘யும் ஜெயிச்சு finals கூட வந்துரலாம்..

அதுக்காக எல்லாம் ஆஸ்திரேலியாவ சாதாரணமா நினைச்சுர கூடாது.. ரொம்ப கவனமா விளையாடனும்..

Dr.Aravind Raja
இறுதியாக.. இந்தியாவை (INDIA) காக்க போவது ராகுல் தான். SS எடுத்து வச்சுக்கோங்க..

மோடி மைதானத்துல இன்னைக்கு ஹீரோ ராகுல் தான்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

WorldCupFinal2023: கப்புக்கு அந்த பக்கம் நிக்குறவங்க தான் ஜெயிப்பாங்க… ரசிகர்கள் சண்டை!

கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

+1
1
+1
7
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

3 thoughts on “அம்பயர் ஆகிறார் ஆளுநர் ரவி… உலகக்கோப்பையில் திருப்பம்: அப்டேட் குமாரு

  1. இது போன்று எவ்வளவு மீம்ஸ் மற்றும் நையான்டிகள் வந்தாலும் ஆளுநர் திருந்தமாட்டார் ஏனெனில் படித்த முட்டாள் வகையறா. இவனல்ல எவன் நினைத்தாலும் பகுத்தறிவு உள்ள தமிழ்நாட்டை ஆளுபவருக்கு எதிராகா ஆளுநரால் ஒரு ஆணியை கூட புடுங்க முடியாது ஏனெனில் ஓட்டு போட்டவர்களில் 80% பகுத்தறிவு உணர்ச்சி உள்ளவர்கள்.

    1. குடும்ப அரசியலை போற்றும் மக்கள் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்வரை திருந்த மாட்டாடர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *