பொதுத்தேர்வு கலாட்டா: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர இன்னைக்கு ஸ்டேஷனரி ஷாப்ல வைச்சு பார்த்தேன் “என்ன நண்பா… நிறைய நோட்ஸ்லாம் வாங்கிட்டு போறீங்கனு” கேட்டேன்…

“நாளைக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வருது…என் பையன் இப்பவே டைம் டேபிள் போட்டு பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு” சொன்னாரு…

“ஆமா… உங்க பையனும் 10வது தான படிக்கிறானு” கேட்டாரு…

“ஆமா நண்பா…என் பையன் அடுத்த வருஷம் எத்தனை நாள் லீவ் வரும்னு அரசு வெளியிட்ட அட்டவணைய ரூம்ல ஒட்டிவச்சிட்டி தீவிரமா படிச்சிட்டு இருக்கானு” சொன்னேன்…

“சூப்பர்…அடுத்த வருஷத்துக்கும் பிளான் பண்ணி பையன் படிக்கிறான். ஆல் தி பெஸ்ட் சொல்லிருங்கனு” சொன்னாரு…

இது தெரியாம நம்ம பையன தப்பா நினைச்சிட்டேமேனு வருத்தப்பட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand

மது இல்லாத மாநிலத்தை உருவாக்க திட்டம் வைத்துள்ளோம்! – அண்ணாமலை
‘ரகசிய’ திட்டமோ?

 

Kirachand

ஆட்சி செய்த இடங்களில் பேரழிவை காங்கிரஸ் ஏற்படுத்தியது! – பிரதமர் மோடி
9 வருட பாஜக ஆட்சியில் சுனாமியே வந்துருச்சே ஜி!

நெல்லை அண்ணாச்சி

வங்கிகளின் பங்குகளை ” விற்க ” முடிவு
# அது சரி….election செலவு இருக்கே…!!!!

Sai Sudhar

முட்டி மோதி சண்டை செய்வதில் குடையும்,மழையும் போராளிகள் தான்…

ஜோ…

பாஜக ஆட்சியில கோப்பைய வாங்கினாங்கன்னு எலெக்சன்ல பெருமை பீத்தலாம்னு நினைச்சா, பதிலுக்கு அதுக்கு முக்கிய காரணம் முகம்மது ஷமிதான்னு சொல்லி ஆஃப் பண்ணுவாங்களே..

மயக்குநன்

என் மண், என் தேசம்’ பிரச்சாரத்தின்போது இந்தியாவில் அதிக செல்ஃபிகள் பதிவு செய்யப்பட்டதாக கின்னஸ் சாதனை!- செய்தி.

அதிக மீம்கள் பதியப்பட்டதாக ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை கின்னஸ் சாதனை படைக்குமோ..?!

மயக்குநன்

இனி துரோகிகளுக்கு அதிமுகவில் இடம் இல்லை!- ஆர்.பி.உதயகுமார்.

ஏற்கனவே ‘ஹவுஸ்ஃபுல்’ ஆயிடுச்சு போல..?!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சேதமடைந்த ஐபோன்: பணத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!