தீபாவளிக்கு நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போனேன். நிறைய வெடி வச்சிருந்தாரு. “எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்குனீங்கனு” கேட்டேன்…1000 ரூபாய்க்கு தான் வாங்குனதா சொன்னாரு…
“நம்ப முடியலையே…1000 ரூபாய்க்கு இவ்வளவு வெடி எங்க கிடைச்சதுனு” கேட்டேன்…
“அது ஒன்னும் இல்ல நண்பா…வெடி கடைக்கு போய் முதல்ல வெடி வாங்கிட்டேன்…பில் போடும் போது இந்த வெடிய மட்டும் எனக்கு 1000 ரூபாய்க்கு தரலனா…வண்டியில இருக்குற பெட்ரோல எடுத்து ஊத்திட்டு கடைக்குள்ள புகுந்துருவேன்னு கலாய்ச்சேன்….கடைக்காரன் உண்மைனு நம்பி 1000 ரூபாய்க்கு தந்துட்டான்னு” சொன்னாரு…
“நண்பா உருட்டுரதா இருந்தாலும் பொருத்தமா உருட்டனும்னு” சாஃப்ட்டா சொல்லிட்டு வந்துட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கடைநிலை ஊழியன்
தீபாவளிக்கு டிரஸ் எடுக்குறது, பட்டாசு வாங்குறது கூட ஈசி தான் போல..
ஆனா, தீபாவளி அன்னைக்கு காலைல கறி வாங்குறது ரொம்ப கஷ்டம் போல.. என்னா கூட்டம் !!
என்னால தீபாவளிய சமாளிச்சிற முடியும்
கடைநிலை ஊழியன்
வெடி சத்தம் கேட்கிறது.. தீபாவளி வந்துவிட்டதை உணர்கிறான் வீரன்..
படிக்காதவன்™
உங்களுக்கு தான்(டா) இன்னைக்கு தீபாவளி
எனக்கு வழக்கமா வர்ற ஞாயிற்றுக்கிழமை அவ்வளவுதான்…
கடைநிலை ஊழியன்
தீபாவளிக்கு இவ்ளோ பலகாரம் செய்யுறியே.. எல்லாம் எனக்காக வா..
அதெல்லாம் ஒன்னும் இல்ல..என்னோட friend க்கு போட்டியா whatsapp ல status வைக்கணும், facebook ல போஸ்ட் பண்ணனும்.. அதுக்கு..
Kirachand
தல தீபாவளி கொண்டாட முடியலண்ணே!
ஏன்டா… மாமனார் கூப்பிடலயா? இன்னும் கல்யாணமே ஆகலயேண்ணே…
ச ப் பா ணி
குடும்ப விவகாரத்தில் சில ஆலோசனை என்பது எதுக்கும் நீயும் ஒன்னு சொல்லிடு என்ற மோடிலேயே கேட்கப்படுகிறது.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் தீ விபத்து!
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!