சிறை அனுபவங்கள் புக் ரிலீஸ்: அப்டேட் குமாரு
பாஜக கொடிக்கம்ப விவகாரத்துல கைதான அமர்பிரசாத் ரெட்டி 22 நாள் ஜெயில் அனுபவம் 22 வருட அரசியல் அனுபவத்தை கத்துக்கொடுத்ததா சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல, ஜெயில்ல அவரை 10 ஆயிரம் கொசு கடிச்சதாவும், இனிமேல் பஸ்டாண்ட்ல கூட படுத்துருவேனும் சொல்லிருக்காரு…
கூடிய விரைவிலேயே அமர் பிரசாத்தின் 22 நாள் சிறை அனுபவங்கள்னு புத்தகம் எழுதானாலும் எழுதுவாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
முடி வெட்டி முடிச்சதும் சலூன் கண்ணாடில பார்ததா தலைமுடி சும்மா அவ்வளவு நல்லா இருக்கு..
அதே ஐஞ்சு நிமிசம் கழிச்சு வீட்டு கண்ணாடில பார்ததா அம்போன்னு இருக்கு..
முதல்ல இந்த வீட்டு கண்ணாடியை மாத்தனும்..
Mannar & company™
இந்த கூட்டத்திலேயும் கஷ்டப்பட்டு துணி எடுத்தபோதும் என்னையும் மதித்து ஞாபக வச்சு 250 ரூபாய்க்கு லுங்கி வாங்கி தர்ற அந்த அன்பு இருக்கே..
அதெல்லாம் ஒண்ணும் இல்லை 4800 ரூபாய்க்கு பில் வந்துச்சு 5000மா ரவுண்ட் பண்ணினா கட்டப்பை எக்ஸ்ட்ரா கிடைக்கும் அதான்!
Mannar & company™
என்னம்மா முறுக்கு கருப்பா இருக்கு எண்ணெய்ல கருக விட்டுட்டியாமா?
இல்ல.. இல்ல இது கருங்காலி முறுக்கு அப்படிதான் இருக்கும்!
கடந்த ஆண்டு, இது போன்ற ஒரு நேரத்தில், எனது நண்பர் ஒருவர் எனக்கு ரூ. 10,000 / – தீபாவளி பரிசாக அனுப்பினார். அதற்கு 2 வாரங்களுக்குப் பிறகு, அவர் தனது பணியிடத்தில் பதவி உயர்வு பெற்றார்!
எனது மற்றொரு நண்பர் தீபாவளிக்கு எனக்கு பரிசு வழங்கினார், தீபாவளிக்குப் பிறகு, அவர் லாட்டரி குலுக்கலில் ஒரு காரை வென்றார்!
எனது மற்றொரு நண்பர் தீபாவளிக்கு எனக்கு ஒரு பரிசை வாங்கினார், தீபாவளிக்குப் பிறகு, அவர் தனது நிறுவனத்திற்கு 20,00,000 / – ரூபாய் கொள்முதல் ஆர்டரைப் பெற்றார்.
இன்னொருவர் எனக்கு 50,000 / – மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களை அனுப்பினார், என்னை நம்புங்கள், அவர் அமெரிக்க கிரீன் கார்டை வென்றார் !!!
நீங்கள் அடுத்த அதிர்ஷ்ட நண்பராக இருக்கலாம் …… உங்களுக்கு ஒருபோதும் தெரியாது !!
உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய தயங்காதீர்கள்…. இது முற்றிலும் உண்மை… நம்புங்கள்… நம்பாதவர்கள் கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள்…. !!
இருப்பினும், சில நண்பர்கள் இந்த நல்ல அதிர்ஷ்ட அறிகுறிகளை புறக்கணித்து, எனக்கு எஸ்எம்எஸ் வாழ்த்துக்களை மட்டுமே அனுப்பினர், அவர்களின் மனைவிகள் துணிகளை கழுவவும், வீடு மற்றும் உணவுகளை ஒரு வருடம் முழுவதும் சுத்தம் செய்யவும் உத்தரவு செய்தனர்.
மேலும் அவர்களது நிறுவனம் அவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொன்னது. அவர்களால் மனைவியிடமிருந்து தப்பித்துச் செல்ல இயலவில்லை.
எனவே புறக்கணிக்க வேண்டாம், ஒரு அதிர்ஷ்ட தீபாவளிக்கு இப்போதே செயல்படுங்கள்…வணக்கம்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…