நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். இரண்டு பேரும் சூடா இஞ்சி டீ குடிச்சிட்டு இருந்தோம். அப்போம் டிவியில கேலோ இந்தியா போட்டியை மோடி துவக்கி வைத்தார்ன்னு செய்தி ஓடிக்கிட்டு இருந்துச்சு.
அப்போம் நண்பர் சொன்னாரு, “தமிழ்நாட்டுல டிசம்பர் 4,5 ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்ப பார்வையிட முதல்ல மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தாரு, அதுக்கப்புறம் ராஜீவ் சந்திரசேகர் வந்தாரு, அதுக்கப்புறம் நிர்மலா சீதாராமன் வந்தாங்க, ஏன் பிரதமர் மோடியே இரண்டு தடவ வந்துட்டாரு…இவங்களோட பயண செலவே பாதி நிவாரணமாகியிருக்கும்ன்னு” சொன்னாப்ல…
டீக்கடைகார அண்ணே… நாங்க பேசுறத அப்படி கவனிச்சிட்டு இருந்தாரு…
டீயை குடிச்சிட்டு கிளாஸ கடையில வச்சிட்டு நாங்க கிளம்பிட்டோம்….
நீங்க அப்டேட் பாருங்க
Kirachand
கடினமான சூழ்நிலையில் கூட நாம் பலவீனமடையக்கூடாது.ஓடி ஒளியக்கூடாது! – பிரதமர் மோடி
மணிப்பூர் பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிந்தது யாரு ஜி?
நெல்லை அண்ணாச்சி
மகிழ்ச்சியில் ராமர்..” ஜெய் ஸ்ரீராம் ” சொன்ன டயானா மரியம் குரியன்
அதாங்க…நம்ம நயன்தாரா
Sasikumar J
காசு கொடுத்து வாங்கிய வாட்டர் பாட்டில் கடைசி சொட்டு இருக்கும் வரை தாகம் தீர்க்கும்..!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எங்கள் கட்சியில் 20 முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர் – அண்ணாமலை
கூச்சப்படாம அந்த 20 பேரையும் வெளில வரச்சொல்லுங்க ஏட்டைய்யா..
black cat
ராமர் கோவில் திறப்புக்கு என் பாதி நாள் லீவ்
ஏன்னா பாதி கோவில் தான் கட்டி இருக்கோம்
Kirachand
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்…
அண்டா பிரியாணியை விட புளியோதரை ரொம்ப பிடிச்சிப் போச்சோ?
Mannar & company
சேமிச்சு வைக்கிற பணமும்,
சேமிச்சு வைக்கிற பொறுமையும்
என்னைக்கும் வீண் போவதில்லை!
black cat 2
துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: கெளதம் மேனன் தகவல்
“இது நடிப்பு மேடம்..”
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…