நண்பர் ஒருத்தர்கிட்ட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருக்கும்போது, “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு ஜனவரி 22-ஆம் தேதி சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயர்ஸ் எல்லோருக்கும் அரை நாள் லீவு விட்ருக்காங்களே.. அந்த நியூச பார்த்தீங்களான்னு” கேட்டேன்.
அதுக்கு அவரு “பாதி கட்டி முடிச்ச கோவிலுக்கு அரை நாள் தான் லீவு விடுவாங்க…பின்ன முழு நாளா லீவு விடுவாங்கன்னு” சொன்னாப்ல.
“அதுவும் சரிதான்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
என்னது கோவில்ல உடனடியா ட்ரான்ஸ்லேட்டர் கருவி பொருத்தணுமா
எதுக்குடா சாமிக்கு சமஸ்க்ரிதம் மட்டும் தான் தெரியுமாம்…
நாம தமிழ்ல வேண்டிக்குறது அவருக்கு புரியணுமே அண்ணே!!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது
ஆமா தகவல் திருட மட்டும் தான் ஆதார் யூஸ் பண்ணுவோம்.
Sasikumar J
நேத்து காணும் பொங்கல் எப்படி போச்சு..
மாவு / பால் பாக்கெட் கிடைக்காம ரொம்ப கஷ்டமா தான் போச்சு..!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புதுச்சேரி: ₹10 நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என ஆஃபர் அறிவித்த உணவகம்..
கோயமுத்தூர் மக்கள் பி லைக்: கடையோட சேர்த்து தூக்கிட்டு வாங்கடா என் செல்லத்தை..
ச ப் பா ணி
மகிழ்ச்சி ஒரு மடங்கு இருப்பினும்..அது பகிரப்படும் நபர்களைப் பொறுத்தே
இரு மடங்காகிறது
balebalu
மத்திய பிரதேசத்தில ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 400 கோடி கடன் வாங்க போறாங்க மாமா
சபாஷ் ஸ்கூல் , காலேஜ் எல்லாம் கட்ட போறாங்களா மாப்ள
நீங்க வேற ராமர் ,சீதை , லக்ஷ்மன் க்கு கோவில் கட்ட போறாங்களாம் மாமா
black cat 2
அதிக மாடுகள் பிடித்து முதலிடம் பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..!
கஷ்டப்பட்டு படிச்சி பாஸ் ஆன எங்களுக்கே..இன்னும் வேலை கிடைக்கல ராஜா..! – TNPSC GUYS
ச ப் பா ணி
வரி’மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது
‘பிப்ர’வரி
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை குறைக்க மோடி முயன்றாரா?
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!