நண்பர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். அப்போம் அவரு, “சம்பளம் போட்ட ஒரு வாரத்துல செலவாகிடுது…மாசக் கடைசி வேற..எப்போம் தான் அடுத்த மாசம் வரும்னு இருக்கு நண்பான்னு” உச் கொட்டுனாப்ல…
“அட…நீங்க வேற நண்பா…நம்ம ஊர்ல பட்ஜெட்டே மாச கடைசில தான் தாக்கல் பண்றாங்க… இதெல்லாம் பாத்தா முடியுமா…ஃப்ரீயா விடுங்கன்னு” சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
கோர்ட்டுல அவசர வழக்கா எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க மாமா
சபாஷ் மாப்ள… மணிப்பூர் கலவரமா அல்லது விவசாயிகள் பிரச்சனையா
சிங்கத்துக்கு பெயர் வெச்ச பிரச்சனை மாமா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,
சலூனில் நல்ல பார்பர் அமைவதெல்லாம் அந்த இறைவனுக்கே அமையாத வரம்
கடைநிலை ஊழியன்
இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது – பொன்னையன் #
எதுக்கும் இந்த விஷயம் எடப்பாடிக்கு தெரியாம பாத்துக்கோங்க..
மன்னர்
எப்போதும் கேட்டாலும் கிடைக்காத இட்லிபொடி என்றாவது கேட்காமலே
தாராளமாக கிடைக்கிறது என்றால் அன்று சட்னி பற்றாக்குறை என்று புரிந்து கொள்.
ரொம்ப தூரம் போட்டியா அக்பர்?
நீ எங்க விட்டு போனியோ அங்கேயே தான் இருக்க சீதா #AkbarSeetha
இப்ப இந்த பெண் சிங்கம் சீதாவை வேற Zooக்கு மாத்தும்போது தீக்குளிக்க சொல்லுவானுங்களே! நாம ராமாயணத்தை அப்படியே follow பண்ணணுமே !
நமக்கு ஒருநாள் மட்டும் லீவ் கொடுத்துட்டு ஆறு நாளைக்கு லீவ் எடுத்துக்குது இந்த ஞாயிற்றுக்கிழமை…
சினிமாவில் மட்டும் தான் வெடிக்கு திரி ரொம்ப பெருசா இருக்கும் ஏன் தெரியுமா ஹீரோ வந்து சண்டை போட்டுட்டு வந்து அணைக்கிறதுக்காக தான்…!
கடைநிலை ஊழியன்
எப்படி All Out போட்டா கொசு வராது னு நம்ப படுதோ, அதே மாதிரி தான் இந்த Green Tea ‘யும். குடிச்சா, உடம்பு குறையும் னு நம்பப்படுது !!
வாரம் பூரா வெளியே ஓடி ஓடி உழைத்து ஞாயிற்றுக்கிழமை வந்ததும் நல்லா தூங்கணும்னு நினைக்கிற கணவனுக்கும், வாரம் பூரா வீட்லேயே அடைஞ்சி கிடக்கிற மனைவி ஞாயிற்றுக்கிழமை வந்ததும் கணவன், குழந்தைகள்கூட வெளியே போகலாம்னு நினைக்கிற இருவருக்கும் வரும்நாள்தான் #ஞாயிற்றுக்கிழமை !!
ராகுல், கார்கேவின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்படுவேன்” – செல்வப்பெருந்தகை
நாங்க இருக்கோம் -கோஷ்டிகள்
ச ப் பா ணி
சேர்ந்தே இருப்பது என்னவோ?
மீட்டிங்கும் மேரி கோல்ட் பிஸ்கட்டும்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?
தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினை வெளியீடு!