update kumaru today December 14 2023

இது என்னடா புது அட்வைஸா இருக்கு: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துல பிரேமலதா விஜயகாந்த் கட்சியோட பொதுச்செயலாளரா நியமிக்கப்பட்ருக்காங்க… update kumaru today December 14 2023

கூட்டத்துல அவங்க பேசும்போது, “தேமுதிகவுக்கு புதிய கட்டடம் கட்ட போறோம். ஐடி விங் அமைக்க போறோம். மீண்டும் பழைய தேமுதிகவா வீறு கொண்டு எழுவோம்ன்னு” நிர்வாகிகளுக்கு எனர்ஜி ஸ்பீச் கொடுத்தாங்க.

அப்படியே போகுற போக்குல, ”மாவட்ட செயலாளர்கள் முடியெல்லாம் நரைச்சு போச்சு…நீங்க டை அடிங்க…அப்போம் தான் இளைஞர்கள் நம்ம கட்சிக்கு வருவாங்கனு” அட்வைஸ் கொடுத்துருக்காங்க… இது என்னடா புது அட்வைசா இருக்கு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோழியின் கிறுக்கல்!!

நல்லா இருக்கும் போது பகுத்தறிவு நல்லா வேலை செய்யும்,
ஆனா நாம கஷ்ட காலத்தில் இருக்கும் போது மூடநம்பிக்கை வராம இருக்கிறது தான் உண்மையான பகுத்தறிவோட பலம்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இந்தாப்ப… நாடாளுமன்ற தாக்குதலுக்கு காரணம் நேருவா இந்திரா காந்தியா..? சட்டு புட்டுன்னு சொல்லு எனக்கு ஆயிரம் வேலை கிடக்குல்லா..?

ச ப் பா ணி

அதிர்ஷ்டத்தின் ஆஃபர் என்பது கைமறதியாய் வைத்த காசு எதெச்சையாய் கிடைப்பதே!!

ச ப் பா ணி:-

நேரங்கழித்து வீட்டுக்கு வரும்போது வீட்டுக்காரம்மாவை விட வீட்டு ஓனரம்மாவுக்குத் தான்
அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது.

update kumaru today December 14 2023

balebalu

ஏண்ணே அவனை அடிக்குறீங்க…

கேள்வி கேட்டா எப்படியும் எதிர்கட்சி எம் பி க்களை சஸ்பென்ட் செஞ்சுடராங்க

அதுக்கு எதுக்கு 1000 கோடிக்கு மேல் செலவழிச்சு புது பார்லிமென்ட் கட்டினாங்க

பழசே இருந்திருக்கலாமே ன்னு கேக்குறாம்ப்பா!!

 

update kumaru today December 14 2023

செங்காந்தள்:

நீங்கள் எவ்வளவு பெரிய அல்லது சிறிய சட்ட மீறல்களைச் செய்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல.
எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்…!!!

update kumaru today December 14 2023

லாக் ஆஃப்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

விழுப்புரம் பள்ளி மாணவி தற்கொலை – போலீசார் குவிப்பு: என்ன காரணம்?

செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு: ஜனவரி 3-க்கு ஒத்திவைப்பு!

“ஈரம்” இயக்குனரின் அடுத்த படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

update kumaru today December 14 2023

+1
1
+1
15
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *