கூட்டணி உடைஞ்சு அங்கங்க கும்மி அடிச்சிக்கிட்டு இருக்காங்க…உங்க அண்ணா என்னய்யா பண்ணிக்கிட்டுருக்காரு? வாய தொறந்தா வெடி சத்தமா இருக்குமேன்னு அண்ணாமலை ஆர்மி சிப்பாய் ஒருத்தன்கிட்ட கேட்டேன். அவன் ரொம்ப லாஜிக்கா “அண்ணே நேத்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிட்டு வாயில கொழுக்கட்டைய வச்சிக்கிட்டாரு…எங்க வாயிலயும் கொழுக்கட்டைய வச்சிக்க சொல்லிட்டாரு” அப்டினு ஒரு பதில் சொன்னாப்ல.
நல்லாத்தான் வளர்த்துவிட்டுருக்காங்க வார் ரூம்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Tamilarasan
In Marriage Function…
மாப்ள ~ கண்டிப்பா சாப்பிட்டு தான் போவணும்,
மீ ~ நான் வந்ததே அதுக்கு தான்டா…
James Stanly
என்ன கொடுமை பாத்திங்களா…
எங்களுக்கு இன்னிக்கு ஸ்கூல்னு தெரிஞ்சே தலைவன் வாசன அரஸ்ட் பண்ணிருக்காங்க…
ஜோ…
கடந்த 9 வருஷத்தில மகளிர் 33% ஒதுக்கீடு பத்தி அத்தனை கட்சிகள் சொல்லியும், அப்போ தாக்கல் பண்ணாம இப்ப பண்றார்னா என்ன அர்த்தம்?
~ ஜீ க்கு மகளிர் மேல அக்கறைன்னு அர்த்தம்.
இல்லை, 2024 தேர்தல் மேல அக்கறைன்னு அர்த்தம்.
மயக்குநன்
கஷ்டமோ, நஷ்டமோ 2026-ம் ஆண்டு தேர்தலில் சமக தனியாகப் போட்டியிட வேண்டும்!- சரத்குமார்.
அது உங்க இஷ்டம்..!
balebalu
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு : பிரதமர் –
ஆனா புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் மட்டும் திறப்பு விழாவில் இருந்து கொடி ஏற்றுவது வரை ஜனாதிபதிக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை போல
#முரண்
மயக்குநன்
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ரெய்டு அதிகரிக்கும்!- கார்த்தி சிதம்பரம்.
அமலாக்கத்துறை ரெய்டைச் சொல்றாரா… லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டைச் சொல்றாரா..?
லாக் ஆஃப்
வந்தாச்சு ஜியோ ஏர்பைபர் இணைய சேவை: ஜியோ பைபர்-ஐ மிஞ்சும் வேகம்!
மகளிர் மசோதா: கனிமொழி எழுப்பும் கேள்விகள்!