இன்னைக்கு இந்தியா – நியூசிலாந்து பைனல் மேட்ச். டீக்கடைல இன்னைக்கு கொஞ்சம் கூட்டம் அள்ளுச்சி…
இந்தியா பெளலிங் பாத்து, எப்படியும் ஈசியா ஜெயிச்சிரும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா பேட்டிங்ல கோலி, ரோகித் அவுட் ஆகவும் கொஞ்சம் ஜர்க் கொடுத்துச்சி.. பிபி மாத்திர வேற வீட்டுல மறந்து வச்சிட்டு வந்துட்டேனு வருத்தப்பட்டேன்.
என்ன பண்ணப்போறங்கனு நினைச்சப்ப, கடைசில அதிரடியா விளையாடி ஹர்திக், ராகுல், ஜடேஜா சேர்ந்து இந்தியாவ வின் பண்ண வச்சிட்டாங்க… எப்படியோ டீக்கடக்காரருக்கு சந்தோசம்… என்னனு கேட்டதுக்கு… இந்தியா மேட்ச்சும் வின் பண்ணி கப் தூக்கிட்டு… எனக்கு டீ வித்து.. கப்பும் காலியாகிடுச்சி’னு சொல்றாரு
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes & trolls march 9

கடைநிலை ஊழியன்
பஸ்’ல ஜன்னல் சீட்டுக்கு சண்ட போடுற குரூப் எல்லாம், வெயில்காலம் வந்ததும், உள் பக்கம் இருக்குற சீட்டுக்கு முந்தியடிக்க ஆரம்பிச்சுறாங்க !!
amudu
குவாரிக்காரர்கள் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், மாமலையும் ஓர் கடுகாம் அவர்களுக்கு.

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁
ஹெலிகாப்டரில் இருந்து வந்தாலும் மாற்றுக்கட்சியினருக்கு விஜய் பதவி வழங்க மாட்டார் ~ புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி அங்கிள்.. உங்களை ஆதவ் அர்ஜுன் சாப்பிட கூப்புட்றார்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எப்போதும் கை கட்டியவாறே இருப்பவர்கள், தன்னடக்கம் மிகுந்தவர்களாக தான் இருப்பார்கள் என்ற அவசியம் எல்லாம் இல்லை, தொந்தியை மறைக்க முற்படுபவர்களாகவும் இருக்கலாம்.

Mannar & company™🕗
நோன்பு கஞ்சிகளில் அரிசியை விட, அரசியல் அதிகமாக இருக்கிறது!

ச ப் பா ணி
இரண்டே பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்த விராட் கோலி
இதுதான் ரெண்டுல ஒண்ணு பாக்குறதோ….
Sasikumar J
எரிச்சல் கொடுக்காத சத்தம் ஏடிஎம் மெஷின் பணத்தை எண்ணும் போது கொடுப்பதாகத்தான் இருக்கும்…!

Sasikumar J
பேருந்து, ரயில் பயணத்தின் பல முக்கிய காட்சிகளை மூழ்கடித்து விடுகிறது மொபைல் ஃபோன்…!
லாக் ஆஃப்