இன்னைக்கு திமுக பொதுக்கூட்டத்துல பேசுன ஸ்டாலின், ”மோடி குஜராத் முதல்வரா இருக்கும் போது, ‘குஜராத் 60 ஆயிரம் கோடி வரி கொடுக்குது.. ஆனா நீங்க கிள்ளி போடுறீங்க… குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா?னு கேட்டாராம். அதே மாறி நானும் கேட்குறேன்.. தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?’னு ஸ்டாலின் பேசினாரு.
இத டீக்கடைல கேட்டுட்டு இருந்த ஒருத்தரு, “அப்போ திமுக கூட்டணில இருந்த காங்கிரஸ், பாஜக ஆண்ட குஜராத்துக்கு கொடுக்கல.. அதே மாறி இப்போ, ஆட்சிக்கு வந்த பாஜக, அதே காங்கிரஸ் கூட்டணில இருக்குற திமுகவுக்கு நிதி கொடுக்க மாட்டேங்குது. இதுக்கு பேர் தான் கர்மா” அப்படினு சொல்லிட்டு போய்கிட்டே இருக்காரு. இத பழிவாங்குறதுனும் சொல்லலாம் தானே?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes trolls march 12

Luckylook 💙
“இந்தி கத்துக்கறதுலே என்ன பிரச்சினை?”ன்னு திரும்பத் திரும்ப பாப்பானுங்க கேட்குறானுங்க.
தமிழ்நாட்டுலே எல்லாரும் சிக்கன், மட்டன் சாப்பிட்டே ஆகணும்னு தமிழ்நாடு அரசு ஒரு உணவுக் கொள்கையை அமல்படுத்தி, இவனுங்க வாயிலே திணிச்சா அதை ஒத்துப்பானுங்களா?

சரவணன். 𝓜
மோடி அரசு தமிழர்களுக்கு எதிரானது அல்ல – தர்மேந்திர பிரதான்
~ புரியுது பாஸ் .. இது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரானதுன்னு..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எதாவது இன்டர்வியூ போறதுக்கு முன்ன யாராவது குட் லக் சொன்னா தான் பதட்டம் அதிகமாகுது..
குட்லக் எல்லாம் சொல்ல சொல்லி யார்றா உங்க கிட்ட கேட்டா..? கொஞ்சம் சும்மா இருங்களேன்டா..

ArulrajArun
அண்ணா இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் – டி.டி.வி. தினகரன்
-அம்மா இருந்திருந்தால் என்ன பண்ணியிருப்பாங்கன்னு கேளு …

balebalu
‘கமிட்டி பரிந்துரைத்தால் தான் திட்டத்தை ஏற்போம் ‘ன்னு
தெளிவா கொட்டை எழுத்துல போட்டிருக்கே
கண்ணுக்கு தெரியல்ல
எப்படி தெரியும்
இங்கிலீஷ் படிக்க தெரிஞ்சா தானே தெரியும்

சரவணன். 𝓜
நாடாளுமன்றத்தில் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் ன்னு சொன்னதும் அதே நாடாளுமன்றத்தில் ஒரு வகையில் நானும் தமிழர் தான்னு சொன்னதும் ஒரே ஆளா?

saravankavi
தமிழுக்கு பெருமை சேர்க்க பிரதமர் நினைக்கிறார் – அண்ணாமலை
ஓகோ.. அதனால தான் இயற்கை பேரிடர் நிதி, பள்ளி கல்வி நிதி, ஜிஎஸ்டி வரி ன்னு எதையும் ஒதுக்கீடு செய்ய மாட்டேங்கறாங்களா..
லாக் ஆஃப்