இன்னைக்கு காலையில எழுந்திருச்சு வீட்டை விட்டு வெளிய வாரேன் ஒரே பனி மூட்டமா இருக்குது. சுத்தி முத்தி எதுவும் கண்ணுக்கு தெரியல. என்னடா ஊட்டி, கொடைக்கானல்ல கூட இப்படி இருக்காதுன்னு நினைச்சா, அதுக்குப்புறம் தான் நியாபகம் வருது இன்னைக்கு போகி பண்டிகைன்னு.
பயபுள்ளய்ங்க எல்லா வேஸ்ட் பொருளையும் எடுத்து எரிச்சிட்டானுங்க…சென்னையே கொஞ்சம் நேரம் ஸ்தம்பிச்சிருச்சின்னா பார்த்துக்கோங்க. ரோட்ல போற காரு, வண்டி, ஆளுங்க எதுவுமே தெரியல…டீக்கடைக்கு போய்ட்டு, தட்டித் தடுமாறி தான் வீடு வந்து சேர்ந்தேன்…
பொங்கல் முதல் நாளே இப்படியா…இன்னும் மூணு நாள் இருக்கே, நம்ம பயபுள்ளங்க என்னென்னல்லாம் பண்ணப்போறாய்ங்களோ…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெரிய ஆசைன்னு எதுவும் இல்லீங்க.. பண்டிகைக்கு பிளைட் டிக்கெட் விலை ஏறிப்போச்சுன்னு கவலைப்படற அளவு ஒரு வசதியான வாழ்க்கை வாழ்ந்துறனும்.
Black Cat 2
வீடு கட்டத தேவ “செங்கலு” எல்லோருக்கும் ஹேப்பி “பொங்கலு”
இட்லி
50 தொகுதிலையாவது பிஜேபி ஜெயிக்கும்னு போட்டுக்கோ…
மேடம்… தமிழ்நாட்டுல இருக்கிறதே 39 தான் மேடம்..
அப்ப ஒரு 25ன்னு போட்டுக்கோ!
பாஸ் உங்க ஏரியால 5G எப்படி எடுக்குது.. எங்க ஏரியால அவ்ளோவா சிக்னல் கிடைக்க மாட்டேங்குது..
~டேய்.. நா BSNL யூசர் டா..
எனக்குன்னு யாராச்சும் வருவாங்களா ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது..
எனக்குன்னே வருவீங்களா அப்படின்னு வருவாங்க அதான் டிசைன்!
நீங்க அவசரமா வெளியே கிளம்பும் போது வீட்டுல சூடா டீ கிடைக்கும் அதே நீங்க வீட்டுல இருக்கும் போது ஆறிப்போன டீதான் கிடைக்கும்.
அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பேன்~ஓபிஎஸ்
அடகு வச்சதே நீங்கதான்யா..
Manjari
மார்கழியே! இன்றோடு நீ ‘போகி’றாய்!
தை தை என்று நாளை குதிப்போம்..!
செய்தி: அன்னபூரணி படத்தை நீக்கியது நெட்ஃபிலிக்ஸ்.
~கேரளா ஸ்டோரி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தையெல்லாம் படமா பாருங்கனு சொன்னீங்களே…இதுவாடா உங்க கருத்து சொதந்திரம்..??
லாக் ஆஃப்