இன்னைக்கு ஆபிஸ்ல கூட வேல பாக்குறவங்க… கோவா அல்லது கொடைக்கானலுக்கு போகலாம்னு பிளான் போட்டாங்க.. எனக்கு உடனே ‘நா வர்றேன்’னு சொல்ல ஆச தான்.. ஆனா வீட்டம்மாட்ட பெர்மிஷன் வாங்கனும்னு எதுவும் சொல்லல..
வீட்டுக்கு வந்ததும், எப்படி பெர்மிஷன் வாங்குறதுனு ஒரெ யோசனையா இருந்துச்சு.. கோவா, கொடைக்கானல்னு சொன்னா ஓகே சொல்ல வாய்ப்பே இல்ல.
அதனால, “ஏம்மா ஆபிஸ்ல இருந்து கேரளாவுக்கு உள்ள கோயில்களுக்கு ஒரு சுற்றுலா ஏற்பாடு பண்ணிருக்காங்க”னு சொன்னேன்… ”சரி போயிட்டு வாங்க… வரும்போது மறக்காம பிரசாதம் வாங்கிட்டு வாங்கனு” சொல்லிட்டாங்க…
ரூட் க்ளியர் ஆயிடுச்சி…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes & trolls feb 16

செங்காந்தள்
மீண்டும் அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்..!
விகடன் இணையதளத்தை முடக்கிய பிறகும் இப்படி செய்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரியம்.

மயக்குநன்
செங்கோட்டையன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது!- ஓபிஎஸ்.
ஆமாமா… அவருக்கு பழனிசாமி மீது எந்த திருப்தியும் கிடையாது..!

ஜெயக்குமார்
இவ்வளவு ட்ராபிக்ளையும் அவ்வளவு வேகமா வீட்டுக்கு போயி அப்படி என்ன பண்ண போற பொண்டாட்டி கிட்ட திட்டு தானே வாங்க போற அதுக்கு எதுக்கு இந்த வேகம்
பொறுமையாவே போலாமே…! ~ மை மைண்ட் வாய்ஸ்

mohanram.ko
அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் பிரித்து எடுக்கும் வரை அண்ணாமலை இங்க இருப்பான்”-அண்ணாமலை
சித்தாள், கொத்தனார் வேலைக்கு போக போறாரா?

Joe…😎😎
ஹிந்தி கத்துக்க சொல்றீங்களே, அதுல ஏதும் பேர் சொல்ற அளவுக்கு இலக்கியம், நூல்கள் இருக்கா?
~ இல்லைங்க
அதுல ஏதும் ரிசர்ச் புக்ஸ், கண்டு பிடிப்பு குறிகள் இருக்கா?
~ இல்லைங்க,
அதனால எதாவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு இருக்குமா?
~ சத்தியமா இல்லைங்க..
அப்புறம் என்னத்துக்கு நாங்க அதை படிக்கணும்?!

கடைநிலை ஊழியன்
இந்த திங்கட்கிழமை ‘ய எவன் ‘ப்பா கண்டு பிடிச்சது..
நினைச்சாலே.. ஒரே irritating ‘கா இருக்கு ப்பா..

Sasikumar J
~ வைஃப் க்கு ஒரு அட்வைஸ் பண்ணி பாரு…!
~ ஏன் அதை கேட்டுபாங்களா…!
~ அதான் இல்ல…!
~ நமக்கு 100 அட்வைஸ் பண்ணுவாங்க…!
லாக் ஆஃப்