இன்னைக்கு காதலர் தினம்… வழக்கம்போல நமக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாறி ஆபிஸ் போயிட்டேன்.
அங்க போனா காலைல ஒரு டெலிவரி பாய் வந்து, ஒரு பார்சல் தந்துட்டு போனான். என்னையவே எல்லோரும் உத்துபாக்க, பார்சல தொறந்தா… நானே ஷாக் ஆகுற மாறி மூனு ரோஸ், ஒரு சாக்லேட் இருந்துச்சி..
அவ்ளோ தான் மொத்த ஆபிஸும் அத வச்சி, அது யாரு யாருனு கேட்டு என்ன நாஸ்தியாகிட்டாங்க.. இதுக்கு இடையில ‘பாரேன் நமக்கும் யாரோ சர்ப்ரைஸ் ப்ரொபஸ் பண்ணிருக்காங்க’னு லைட்டா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி வந்துச்சி.
நைட்டு 9 மணிக்கு ஒரு போன் ’என்ன மாப்ள ரோஸ் போதுமா… சாக்லேட் எப்படி இருந்துச்சி… நான் தான் சும்மா அனுப்பி வச்சேனு’ பக்கத்து சீட் பரமன் கால் பண்ணி சொல்றான். அவ்ளோ தான் மனசுக்குள்ள வந்த பட்டாம்பூச்சி பறக்குறதுள்ள… மொத்தமா முடிச்சுவிட்டுட்டான்…
என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes & trolls feb 14

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தனித்து போட்டியிட்டால் தேமுதிக தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த்.
~ தனிச்சு போட்டினா, மத்த கட்சி எதுவும் தேர்தல்ல போட்டியிடலேன்னா ன்னு தானே அர்த்தம்..?

dada
97.4 பில்லியன் தர்றேன், Chat GPT ஐ எனக்கு குடுத்துரு – எலான் மஸ்க்
9.74 பில்லியன் நான் தர்றேன், ட்விட்டரை நீ எனக்கு குடுத்துட்டு ஓடிப்போயிரு – OPEN AI சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன்

கோவிந்தராஜ்
Me : உங்களுக்கு ஆளு இருக்கா..?
She : இல்லை ஏன் கேட்கிறீங்க
Me : அப்போ I love you🙈🙈
She : மூதேவி ஆள் இல்லைன்னு தான் சொன்னேன் புருசன் இல்லைனு சொன்னேனா ..?

Sasikumar J
~ வைஃப் கிட்ட எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லிடுவேன்…
~ அப்படின்னா உனக்கு எக்ஸ் இருந்ததை கூட சொல்லிடுவியா…
~ அட காஃபில சக்கர அதிகம், சாம்பார்ல உப்பு கம்மி அதைதான் சொல்லுவேன்…

ArulrajArun
பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பு – செய்தி
after சந்திப்பு; ஜீ to எலான்; அப்புறம் ஜீ டுவிட்டர் எதும் update இருக்கா
எலான் ; டிஸ் லைக் பட்டன் கொண்டு வரலாம்னு இருக்கேன்

✒️Writer SJB✒️
விஜய்க்கு Y பிளஸ் பாதுகாப்பு ~ மத்திய அரசு
எனக்கெனவோ உளவு பாக்க கொடுத்தா மாறி இருக்கு..

வாலு
ஏம்மா கட்டுன புருஷனுக்கே மீன் குழம்புல விஷம் வச்சி கொன்னுருக்கியே அதை அவர் சாப்பிடும் போது உனக்கு பாவமா தெரியலையா?
தெரிஞ்சது,,,
எப்போ?
மீன் டேஸ்டா இருக்கு இன்னொரு துண்டு கொடு என்று கேட்டப்போ..!

லாக் ஆஃப்