திரும்ப திரும்ப பேசுறாரு : அப்டேட் குமாரு
டிவில ‘நேசம் புதுசு’ படத்துல வர்ற வடிவேலு காமெடி ஓடிட்டு இருந்துச்சு. அப்போ ஒரு பஞ்சாயத்து சீனுல அவ்வளவு கலவரத்துலயும் வடிவேலு ’என்ன கையபிடிச்சி இழுத்தியா?’ ன்ங்கிற டயலாக்க திரும்ப திரும்ப அலுக்காம பேசிட்டு இருந்தாரு.
இத பாத்துட்டு சிரிச்சுட்டே இருந்த சித்தப்பு, ‘என்னடா திரும்பவும் ஓபிஆரு திமுகவோட திட்டத்தை ஆதரிச்சு பேசுறாரு? என்று என்ட்ட கேட்டாரு.
அதுக்கு நான் ’என்ன திரும்ப திரும்ப பேசுறாரு.. என்ன திரும்ப திரும்ப ஆதரிச்சாரு’ ன்னு தான் கேட்டேன். அவ்ளோ தான் சித்தப்பு செம கடுப்பாகி பக்கத்துல இருந்த செம்ப விட்டு எறிய., திரும்பி பாக்காம எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம்! ஜஸ்ட் எஸ்கேப்! நான் தப்பிச்சிட்டேன்..
நீங்க அப்டேட் பாருங்க!
சரவணன். ????
இந்தியா பொருளாதார மந்தநிலைக்கு செல்ல வாய்ப்பே இல்லை’ – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
அதானே.. பொருளாதாரம்னு ஏதாவது இருந்தா தானே மந்தநிலைக்கு போகும்..
நாகராஜா சோழன் MA, MLA.
முன்னாள் காதலியின் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்லும்போது
பகுத்தறிவு பற்றி எல்லாம் யோசிப்பதில்லை !
balebalu
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் : பழமொழி
ஒரு நல்ல நிர்வாகத்துக்கு ஒரு மழை பதம் : புது மொழி
-bangalorefloods
small brother krishnamoorthi
1967 முதல் தாத்தா கோவணத்துடன் உழைத்தார். 2022ல் பேரனுக்கு டவுசர் மட்டும் வாங்கிக் கொடுக்க முடிந்தது. சட்டைக்கு இன்னும் எவ்வளவு காலமோ தெரியவில்லை (விவசாயிகளின் நிலை மட்டுமல்ல, திமுக தொண்டர்கள் நிலைமையும் இதுதான்)
ச ப் பா ணி
6 படங்கள் படுதோல்வி; பல கோடி நஷ்டம்… தொடருமா பான்-இந்தியா திரைப்படங்கள்?
-ஒரே நாடு ஒரே மொழி போல் செட்டாகாது பான் இந்தியா படங்கள்
தர்மஅடி தர்மலிங்கம்
காந்திக்கு பிறகு மக்களின் உணர்வை புரிந்து கொண்டவர் பிரதமர் மோடி – ராஜ்நாத்சிங்!
என்னென்ன கதை சொல்றாரு பாருங்க..??
எனக்கொரு டவுட்டு
சிக்னல் போட்டதும் பறந்துட்டே போனியே அப்படி போய் என்னதான் பண்ண போறே?
அடுத்த சிக்னல்ல மொத ஆளா நிப்பேன்..
-Happened
சரவணன். ????
“அனைவரும் ஒற்றுமையாக பயணித்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிட்டும்!” – ஓ.பி.ரவீந்திரநாத்
எதுக்கு சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க.. உங்க அப்பாவுக்குன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே?
amudu
பாஜக ஆட்சியில் கோபமும் வெறுப்புணர்வும் அதிகரிப்பு. -ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கே, காங்கிரஸ் கட்சி மீது தானே.
லாக் ஆப்
அ(ப்பீல்) திமுக: அப்டேட் குமாரு