ஒரு காபிய ஸ்ட்ராங்கா ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்து பேப்பரை பொரட்டினா அதானி உலகத்தோட மூணாவது பணக்காரன்னு நியூஸ் போட்டிருந்தாங்க. அதைப் பாத்துட்டு வாயப் பிளந்தப்ப பக்கத்துல உக்காந்து பப்ஸ் தின்னுக்கிட்டிருந்த தம்பி ஒரு விளக்கம் கொடுத்தாப்ல.
‘அதானியோட சொத்து மதிப்பு பத்து லட்சம் கோடினு ஹெட் நியூஸ பாத்துப் பாத்து எல்லாரும் வாய பொளந்துட்டுருக்காங்க. ஆனா இதை ஏன் இப்படி பாக்குறீங்க? விருமாண்டி மாதிரி இன்னொரு ஆங்கிள்லயும் பாருங்க.
அதானிக்கு ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல கடன் இருக்குதாம். உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு? இன்னும் நீங்க முப்பது ஜென்மம் எடுத்தா கூட இவ்ளோ கடன் வாங்க முடியாது. அதனால உங்களை விட என்னை விட அதானிதான் பெரிய கடன் காரன். கவலப்படாம காபிய குடிங்க’ன்றாப்ல. உண்மையிலயே இந்த ஆங்கிள் நல்லா இருக்கே. அப்டேட் பாருங்க

சரவணன். 𝓜
பிரதமர் மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் – குலாம் நபி ஆசாத்
~ ஆமா எப்படி திடீர்னு கண்டுபிடிச்சீங்க?
~ ஆளுநர் பதவி காலியிருக்குன்னு சொன்னாங்க..

balebalu
ரயில் டிக்கெட்களை இனி கேன்சல் செய்யும்போது, அதற்கும் GST வசூலிக்கபடும் – செய்தி
இனிமே டிரெயின் போகுறதை வேடிக்கை பார்க்க முடியுமா அல்லது அதற்கும் GST உண்டா

Madurai Jinna
ஜெயலலிதா கொலை வழக்கு : 500 பக்க அறிக்கை தாக்கல்..
500 பக்கம்னா, அது என்னடா அறிக்கையா., இல்ல, பொன்னியின் செல்வன் புஸ்தகமாடா.?

ரஹீம் கஸ்ஸாலி
வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் “புல் புல் ஏர்வேஸ்” என்று ஒன்றிய அரசு சார்பில் விமான சேவை துவங்க நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லாமல் இருக்கணுமே?!

சாணக்கியன்
‘‘எலெக்ட்ரிக் கார்கள்தான் நமது எதிர்காலம்!’’ – பிரதமர் நரேந்திர மோடி.
ரைட்டு அடுத்து நம்ம அதானி எலக்ட்ரிக் கார் தயாரிக்க போறார் போல…

கோழியின் கிறுக்கல்
நம்ம வாழ்க்கையில் விக்ரமன் படம் மாதிரி சுற்றி இருக்கிறவன் எல்லாம் நல்லவனா இருக்கணும்னு எதிர்பார்த்தா,
விஜயகாந்த் படம் மாதிரி வர்றதெல்லாம் வில்லனாவே வருது!!

vasanth
பெட்ரோல் விலையை பார்த்தா பேசாம இரண்டு புல்புல் பறவையை வாங்கிடலாம்னு தோணுது. டிராபிக்கும் இருக்காது. பெட்ரோல் செலவும் மிச்சம்.. ஆமா அந்த பறவை எங்கே கிடைக்கும்..?
லாக் ஆஃப்
பணி ஓய்வு பெற்ற மோப்பநாய்: பாசத்துடன் வழியனுப்பி வைத்த அதிகாரிகள்!