அவரு எங்க இருக்காரு தெரியுமா? : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போனப்ப, ’இவளுக இம்சை தாங்கமுடியல… இவளுக இல்லாமலும் இருக்கமுடியல’னு வாலி எழுதுன பாட்டு ரேடியோல ஓடிட்டு இருந்துச்சு…

இத கேட்டதும் பிரச்சாரத்த முடிச்சிட்டு டீக்குடிக்க வந்த எனக்கு, 3 நாளைக்கு ஒரு தடவனு வாண்டடா வந்து வண்டில ஏறி… பின்னாடி உச்சநீதிமன்றமே கொட்டுனாலும் வலிக்காத மாறி இருக்குற ஆளுநரு ஞாபகம் வந்துட்டாரு..

ஊர் முழுக்க ரம்ஜானுக்கு எல்லோரும் பாய்கிட்ட இருந்து எப்போ பிரியாணி வரும்னு ஏக்கத்தோட சோசியல் மீடியால போஸ்ட் போட்டுட்டு இருக்காங்க..

ஆனா பாருங்க நா மட்டும் பாய் வீட்டு பிரியாணிக்கு பதிலா.. ராஜ் பவன்ல இருக்கு ஆர் என். ரவிய தேடிட்டு இருக்குறேன்.

ஒருவேள ஏதாச்சி பேசி பாஜகவுக்கு விழ வேண்டியும் ஓட்டையும் பிரிச்சிடுவாரோனு அவர ஊட்டிக்கு அனுப்பிருப்பாங்களோ?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

சரவணன். ????

ஏன் பாய் பிரண்ட் பிரியாணி தரலைன்னு நெகடிவ்வா பாக்கறே…

உன் டயட் மேல அக்கறையா இருக்காருன்னு பாசிட்டிவா பாரு..

கோழியின் கிறுக்கல்!!

போன மாசம் இந்நேரம் ‘Girl Friend’ தேடிட்டு இருந்தாங்க!?

இப்ப “Bhai” Friend தேடிட்டு இருக்காங்க!!

கோழியின் கிறுக்கல்!!

சாதாரணமான நாட்களில் சூரியன் பயங்கர உக்கிரமா இருக்கும்,

அதே அக்கினி நட்சத்திரத்திலே உக்கிரமா பயங்கரமா இருக்கும்!

செங்காந்தள்

டெல்லியிலிருந்து திமுக கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்ய வர்றாங்க மாமா.

ராகுல் காந்தியா மாப்பிள்ளை?

நிர்மலா சீதாராமன் மாமா

வசந்த்

கோ பேக் மோடியின் அப்டேட் வெர்ஷன் தான்

“ஆப் கி பார் சாக்கோ பார்”

கோழியின் கிறுக்கல்!!

சாதாரணமான நாட்களில் சூரியன் பயங்கர உக்கிரமா இருக்கும்,

அதே அக்கினி நட்சத்திரத்திலே உக்கிரமா பயங்கரமா இருக்கும்!

balebalu

எலெக்க்ஷனே ஒரு வாரத்துல வர போகுது
இன்னும் தேர்தல் அறிக்கை காணும் ?

எப்படியும் அதுல தமிழ்நாட்டுக்கு நல்லது எதுவும் இருக்க போறதில்ல
இதுல அறிக்கை வந்தா என்ன வராட்டி என்ன

Kirachand

காரைக்குடியில் நடக்கவிருந்த அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து…

நடத்துற ரோடு ஷோ எல்லாம், ரோட்டுல நடந்து போறவங்க கண்டும் காணாமல் செல்லும் ஷோ கேஸ் பொம்மை விளம்பரம் ஆகிவிடுகிறதே என்ற பயம் வந்துடுச்சோ?

பர்வீன் யூனுஸ்

திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் ஐடி ரெய்டு#

வாக்காளர்களுக்கு கொடுக்க ‘பானை’க்குள்ள பணம் வச்சிருக்காரோன்னு பார்த்திருப்பாங்களோ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி : ஜெயக்குமார் அட்டாக்!

தளபதி விஜயின் ‘GOAT’ படத்தில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..!