சிலிண்டர் விலையை குறைக்க குட் ஐடியா: அப்டேட் குமாரு!
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருவழியா திமுக, அதிமுக இன்னைக்கு வேட்பாளர்களையெல்லாம் அறிவிச்சிருக்காங்க…
வேட்பாளர்களை அறிவிச்ச கையோட, திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ருக்காரு. பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் 65 ரூபாய், கேஸ் சிலிண்டர் 500 ரூபாயா குறைக்கப்படும்னு சொல்லிருக்காங்க…
இதுபத்தி நம்ம திமுக நண்பர் ஒருத்தர்கிட்ட “இப்பவே 900 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விக்கிறாங்களே… நீங்க எப்படி 500 ரூபாய்க்கு கொடுப்பீங்கன்னு” கேட்டேன்.
அதுக்கு அவரு, “சிலிண்டர் விலையை தான குறைப்பேன்னு சொன்னோம். அதே மாதிரி சிலிண்டர் சைஸ்சயும் குறைச்சிருவோம்ன்னு” சொன்னாப்ல… சூப்பர் ஐடியான்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
உறவினர் வீட்டில்.. இன்னொரு தோசை வைக்கவானு கேட்கும்போது.. ஒரு அவஸ்தையான மனநிலை வந்துவிடுகிறது
கோழியின் கிறுக்கல்!!
‘அவருக்கு பதில் இவரை நிக்க வச்சு இருக்கலாம்!’ன்னு ஒருத்தன் சொன்னான்!!
உன் வீட்டம்மாவும் ‘எங்கப்பா இவருக்கு பதிலாக வேறு யாரையாவது கட்டி வச்சிருக்கலாம்!’ன்னு சொல்லிட்டு இருக்காங்க, ‘போய் அதை முதல்ல பாரு’ன்னு சொன்னேன்,
கம்முன்னு கிளம்பிட்டான்!!
நானும், பன்னீர்செல்வமும் அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒன்று சேர்ந்து இருக்கின்றோம் ~டிடிவி தினகரன் அரசியல் ரீதியா உங்கள தோற்கடித்தது யாரு ?! அதுவும் பன்னீர் தான் ?!
ச ப் பா ணி
நாம மட்டும் பார்த்து.. அந்த பொண்ணு திரும்பி கூட பார்க்கவில்லை என்றால்.. அவங்களுக்கு பெயர் தான் crush
செங்காந்தள்
வாட்டர் கேன் போடும் நபர்கள் டிப் டாப் ஆக கட்சி அலுவலகத்திற்கு சென்று விடாதீர்கள். ஒரு தொகுதியை உங்களுக்கு ஒதுக்கி விடுவார்கள்…!!!
இளையராஜா பயோபிக் கில் இசை வாழ்க்கையை அதிகம் காட்டிவிட்டு வசனங்களை குறைத்தால் நல்லது குறிப்பா அவரது பேட்டி , மேடை பேச்சுகளை avoid செய்ய வேண்டும்
செங்காந்தள்
பாஜக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் – ஜி.கே.வாசன்
நீங்கள் ஒரு தொகுதி போதும் என்கிறீர்கள்.
அவர்கள் இன்னொன்று சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
balebalu
என்னடா யோசனையா இருக்க ? மண்புழு உரம் போட்டு வளர்த்த செடியில் இருந்து சாப்பிடுற உணவு வெஜிடேரியனா , பியூர் வெஜிடேரியனா ஒரே குழப்பா இருக்கு ண்ணே
TTV டு அண்ணாமலை ~ கேட்கவே கூச்சமா இருக்கு இன்னொரு வேட்பாளருக்கு நான் எங்க போவேன் ஒன்னு போதும்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெறுப்பு பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் உத்தரவு!
மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் சத்குரு