மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்
நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர், “இப்பல்லாம் நம்ம மோடி அரசு, மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா உடனே அந்த திட்டத்த வாபஸ் வாங்கிறாங்க. இன்னைக்கு பாருங்க 2000 வரை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவச்சிருக்காங்க பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல…

“யோவ்… அது ஒன்னும் இல்லை. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் எலெக்‌ஷன் இந்த மாசம் வருது. அதனால ஒத்திவச்சிருக்காங்கன்னு” சொன்னேன்.

கம்முனு கிளம்பிட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோழியின் கிறுக்கல்!!

நடிகர் சங்கத்துக்கு அப்படி எவ்வளவு தான் கடன் வாங்கி வச்சிருக்கீங்கப்பா!?

Mannar & company™
ராத்திரியில தட்டி தூங்க வைக்கிறதும், காலையில் அடிச்சு எழுப்புறதும் ஒரே ஆளா..?! #பெற்றோர்_பரிதாபங்கள்

கோழியின் கிறுக்கல்!!

உண்மையில் இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அதிகம் கடுப்பாவது, காவல் துறை தான்!!

Mannar & company™

திங்கட்கிழமை தர்ற மிகப்பெரிய சந்தோசம் என்னன்னா ஞாயிற்றுக்கிழமை செய்த மீதி பிரியாணியை திங்கட்கிழமை ஆபீஸ்க்கு எடுத்துட்டுபோய் சாப்பிடலாம்ங்கறது மட்டும்தான்!

கோவிந்தராஜ்
என்னை தேடவேண்டாம் தொலைந்து போகிறேன்னு பேப்பர்ல எழுதிவச்சேன் இப்ப அத காணோம் தேடிகிட்டு இருக்கேன்
Mannar & company™
சோகம்.. திகில்.. படபடப்பு சினிமாவில் மட்டுமல்ல திங்கட்கிழமைக்கும் இருக்கிறது!

கோழியின் கிறுக்கல்!!

சாலையில் செல்லும் போது ஹாரன் அடிப்பது நம் மனதை திருப்திப் படுத்திக் கொள்ளவே, யாராவது நகர்ந்து செல்வார்கள் என்று நம்பிக்கையில் அல்ல!!

Mannar & company™

வேகமாக போற ஞாயிற்றுக்கிழமையையும் மெதுவாக போற திங்கட்கிழமையையும் சகித்துக் கொள்ள பழகிவிட்டது என்றால் பூமர் வளையத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம்!!

படிக்காதவன்™
இதுக்கில்லையா சார் ஒரு எண்ட்’ங்கிற மாதிரிதான் இன்னைக்கு எல்லாத்துக்கும் வரி போட்டுட்டு இருக்காங்க…
🄰🅃🄲 ™

ரொம்ப நேரமா மெசேஜ் பண்ணேன் Reply வரல Dp um காட்டல… அதான் Gpay ல வந்துட்டேன்..

Mannar & company™

என்ன பெரிய பெத்தக்கடன்..

‘நடிகர் சங்கம் கடன்’ தெரியுமா உனக்கு?!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக முப்பெரும் விழா: ‘ஸ்டாலின் விருது’ யாருக்கு?

மகா விஷ்ணுவை அழைக்கலாம், ராமரை அழைக்க கூடாதா? மதுரை புத்தக திருவிழா சர்ச்சை!

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *