அரைச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

எப்பவுமே நம்ம போன் போட்டா ரெஸ்பான்ஸ் பண்ணாத அதிமுக நிர்வாகி ஒருத்தரு இன்னைக்கு வான்ட்டடா கால் பண்ணியிருந்தாரு.

சரி ஏதோ ஒரு பெரிய விஷயம் சொல்லப்போறார்னு பார்த்தா, “அரைச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய தொவைப்போமான்னு” பாட்டு பாடினாரு…

“என்ன சார் திடீர்னு பாட்டெல்லாம் பாடுறீங்கன்னு” கேட்டேன்.

“இல்லை உங்களுக்கே புரியும்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டாரு.

நானும் உட்கார்ந்து ரொம்ப நேரமா எதுக்காக நம்மக்கிட்ட இந்த பாட்ட பாடுனாருனு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

அப்புறம் தான் தெரிஞ்சது, இன்னைக்கு பேட்டி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக பாஜக கூட்டணி அமையுமான்னு செய்தியாளர்கள் கேள்வி கேட்டதுக்கு, அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்னு பதில் சொல்லிருக்காரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

இன்ஷி
கரெக்டா தவறை சரியாக செய்பவர்களே மனித பிறவிகள்..
Sasikumar J
செம்ம ப்ரோ எங்க எந்த ஹோட்டல் ல என்ன நல்லா இருக்கும் அப்படின்னு கரெக்ட்டா சொல்லுறீங்க பெரிய foodya இருப்பீங்க போல…! அதெல்லாம் இல்ல ஆன்லைன் ல ஃபுட் டெலிவரி பண்றேன்…!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திங்கட்கிழமைக்கு இன்னும் எவ்வளவு நேரம் மீதம் இருக்கிறது என்று கணக்கிட ஆரம்பித்து விட்டால், மீதம் உள்ள ஞாயிற்றுகிழமையின் நிமிடங்கள் நரகமாகி விடும்.
Sasikumar J

கடையில பேர் கொடுத்து வெயிட் பண்ணி சாப்பிட்டு கிட்டு இருக்கீங்க அதுக்கு வீட்டுல கறி எடுத்து வீட்டுல சாப்பிட்டு இருக்கலாமே…!

Mannar & company™
“நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர்” நடிகர் சங்க ஆண்டு கூட்டத்தில் பொருளாளர் நடிகர் கார்த்தி பேச்சு!
ரசிகர்கள்: இன்னும் எவ்வளவு கடன்தான்யா வச்சிருக்கீங்க சொல்லுங்க மொதல்ல!?
????????????????????????????
When me watching cooking video, My husband’s mind voice: ” video வா பார்த்து தள்ளுறாளே தவிர ஒன்னும் சமைக்க மாட்டேங்குறா”…
செங்காந்தள்
உலகில் அதிக புன்னகையை எதிர் கொள்பவர்கள் போட்டோ கிராஃபர்கள்…!!!
Sasikumar J
~ இன்னக்கி சண்டே சமைக்க என்ன வாங்கிட்டு வரணும்…! ~ எது வாங்கறதா இருந்தாலும் கொண்டக்கடலை போட்டு செய்ற மாதிரி வாங்கிட்டு வாங்க…!!
black cat 
யாரும் பார்த்து விடக்கூடாது என மாஸ்க் அணிந்தவாறு நடிகர் சங்க கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த நடிகர் விஷால்… அப்புறம் எதுக்கு கடைசில மாஸ்க ரிமூவ் பண்ணிங்க.. எல்லாரும் பார்க்கனும்னுதான்…
ஜோ..
வாங்குற சம்பளத்துக்கு டேக்ஸ், அதை FD போட்டா அதுக்கு டேக்ஸ், பேங்க்ல வித்ட்ரா பண்ணா டேக்ஸ், கடையில வாங்குற பொருள் எல்லாத்துக்கும் டேக்ஸ், டேக்ஸ் ரீபன்ட் அமவுண்ட்க்கும் டேக்ஸ்,. இப்போ கடைசியில டிஜிட்டல் ட்ரான்சக்சன்ஸ்க்கும் 18% டேக்ஸாம்.. கேட்டா டிஜிட்டல் இந்தியாவாம்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share